கடோலினியம்(III) புளோரைடு

வேதிச் சேர்மம்

கடோலினியம்(III) புளோரைடு (Gadolinium(III) fluoride) என்பது GdF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கடோலினியம் முப்புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

கடோலினியம்(III) புளோரைடு
Gadolinium(III) fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கடோலினியம்(III) புளோரைடு
வேறு பெயர்கள்
கடோலினியம் டிரைபுளோரைடு
கடோலினியம் புளோரைடு
இனங்காட்டிகள்
13765-26-9 Y
ChemSpider 75538
EC number 237-369-4
InChI
  • InChI=1S/3FH.Gd/h3*1H;/q;;;+3/p-3
    Key: TYIZUJNEZNBXRS-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10176739
SMILES
  • F[Gd](F)F
பண்புகள்
GdF3
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கடோலினியம்(III) குளோரைடு
கடோலினியம்(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

கடோலினியம் ஆக்சைடும் அமோனியம் பைபுளோரைடும் சேர்ந்து வினைபுரிவதால் கடோலினியம்(III) புளோரைடு உருவாகிறது. இரண்டு படிநிலைகளாக இவ்வினை நிகழ்கிறது::[1][2]

Gd2O3 + 6 NH4HF2 → 2 NH4GdF4 + 4 NH4F + 3 H2O
NH4GdF4 → GdF3 + NH3 + HF

மாறாக கடோலினியம்குளோரைடுடன் ஐதரோபுளோரிக் அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்து வினைகலவையுடன் சூடான நீரை சேர்த்தால் GdF3·xH2O (x=0.53) உருவாகிறது. நீரிலி கடோலினியம்(III) புளோரைடு உருவாக்க இந்நீரேற்றை அமோனியம் பைபுளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். அமோனியம் பைபுளோரைடு பயன்படுத்தாவிட்டால் கடோலினியம்(III) புளோரைடுக்குப் பதிலாக வினையில் கடோலினியம் ஆக்சிபுளோரைடு உருவாகும்.[3]

GdCl3 + 3 HF + x H2O → GdF3·xH2O + 3 HCl

மேற்கோள்கள் தொகு

  1. 郝占忠. 氟化氢铵氟化法合成氟化钆过程的基础研究[J]. 材料科学与工艺, 2010, 18(5):653-656.(in சீன மொழி)
  2. 郝占忠, 王斌. Gd2O3-NH4HF2系制备氟化钆机制及工艺研究[J]. 稀有金属, 2007, 31(1):97-101.(in சீன மொழி)
  3. 郝占忠. 湿法氟化制备水合氟化钆的脱水机制及其氧的行为[J]. 有色金属(冶炼部分), 2010(5):36-39. (in சீன மொழி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோலினியம்(III)_புளோரைடு&oldid=3365154" இலிருந்து மீள்விக்கப்பட்டது