ஐதரோபுளோரிக் அமிலம்

ஐதரோபுளோரிக் அமிலம் (Hydrofluoric acidநீரில் ஐதரசன் புளோரைடின் (HF) கரைசல் ஆகும். இச்சேர்மமானது புளோக்செடின் (புரோசேக்) போன்ற  மருந்துச் சேர்மங்கள், டெஃப்லான், தனிம நிலை புளோரின் உள்ளிட்ட  அனைத்து புளோரின் சேர்மங்களின் முன்னோடிச் சேர்மமாகும். இச்சேர்மம், நிறமற்ற, மிகுதியான அரிக்கும் தன்மையுடைய, பலவிதமான பொருட்களை (குறிப்பாக ஆக்சைடுகளை) கரைக்கும் தன்மையுடைய திரவமாகும். 1771 ஆம் ஆண்டில், காரல் வில்லெம் சீலெ இச்சேர்மத்தை அதிகளவில் தயாரிக்கத் தொடங்கும் முன்பே 17 ஆம் நுாற்றாண்டில் கண்ணாடியைக் கரைக்கும் திறனைக் கொண்டிருந்தது அறியப்பட்டிருந்தது.[3] கண்ணாடியுடனான இதன் அதிக வினைத்திறன் காரணமாகவும், பல உலோகங்களுடனான மிதமான வினைத்திறன் காரணமாகவும் இந்த அமிலமானது நெகிழி கொள்கலன்களில் சேமித்து வைக்கப்படுகிறது. (டெஃப்லானிலும் இலேசாக உட்புகும் தன்மை கொண்டது).

ஐதரோபுளோரிக் அமிலம்
Ball-and-stick model of hydrogen fluoride
Ball-and-stick model of hydrogen fluoride
Ball-and-stick model of water
Ball-and-stick model of water
Ball-and-stick model of the fluoride anion
Ball-and-stick model of the fluoride anion
Ball-and-stick model of the hydronium cation
Ball-and-stick model of the hydronium cation
White plastic bottle With safety cap, labeled "QP Panreac" above smaller text "Hydrofluoric Acid 40% QP" with 6 translations. In a bright orange region along the side, warning symbols are visible.
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளோரோஐதரிக் அமிலம்
ஐதரோனியம் புளோரைடு
இனங்காட்டிகள்
7664-39-3 Y
ChEBI CHEBI:29228 Y
ChemSpider 14214 Y
EC number 231-634-8
InChI
  • InChI=1S/FH/h1H Y
    Key: KRHYYFGTRYWZRS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/FH/h1H
    Key: KRHYYFGTRYWZRS-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14917
வே.ந.வி.ப எண் MW7875000
SMILES
  • F
UNII RGL5YE86CZ Y
பண்புகள்
HF (நீரிய)
வாய்ப்பாட்டு எடை பொருந்தாது
(பார்க்க ஐதரசன் புளோரைடு)
தோற்றம் நிறமற்ற கரைசல்
அடர்த்தி 1.15 கி/மிலி (48% கரைசலுக்கானது)
உருகுநிலை பொருந்தாது
(பார்க்க ஐதரசன் புளோரைடு)
கொதிநிலை பொருந்தாது
(பார்க்க ஐதரசன் புளோரைடு)
கலக்குமியல்புடையது
காடித்தன்மை எண் (pKa) 3.17[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் duPont MSDS
GHS pictograms CorrosiveAcute Toxicity
GHS signal word அபாயம்
H280, H300, H310, H314, H318, H330
P260, P262, P264, P270, P271, P280, P284, P301+310, P301+330+331, P302+350, P303+361+353, P304+340, P305+351+338, P310
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாதது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஐதரோகுளோரிக் அமிலம்
ஐதரோபுரோமிக் அமிலம்
ஐதரயோடிக் அமிலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

ஐதரசன் புளோரைடு வாயுவானது உடனடியாகவும், நிலையாகவும் நுரையீரல்கள், கண்விழிப் படலம் மற்றும் கண்களை பாதிக்கவல்ல கொடிய நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும். நீரிய ஐதரோபுளோரிக் அமிலமானது ஆழமான, வலியற்ற தீக்காயங்கள் மற்றும் திசு இறப்பு நிகழும் காயங்கள் ஆகியவற்றுடன் தொடு நச்சாக உள்ளது. உடலின் கால்சிய வளர்சிதை மாற்றத்துடன் இடைவினையில் ஈடுபடும் போது, அடர் அமிலமானது, 160 சதுர செ.மீ(25 சதுர அங்குலம்) அளவிற்குத் தோலுடன் தொடர்புகொள்ளும்போது அமைப்புரீதியான நச்சுத்தன்மையை உருவாக்கி இறுதி விளைவாக இதய நிறுத்தம் மற்றும் மரணத்தை உண்டாக்குகின்றது. 

அமிலத்தன்மை தொகு

ஐதரோபுளோரிக் அமிலமானது, மற்ற வலிமிகு அமிலங்களுடன் ஒப்பிடும் போது அதன் குறைவான பிரிகை மாறிலியின் காரணமாக வலிமை குறை அமிலமாக வகைப்படுத்தப்படுகிறது. இது நீர்க்கரைசல்களில் மற்ற பொதுவான அமிலங்கள் அயனியாகின்ற விதத்திலேயே அயனியாகின்றன.[4]

HF + H2O   H3O+ + F

நீர்த்த நீர்க்கரைசல்களில், இது முழுமையாக அயனியாகாத காரணத்தால், HF மட்டுமே வலிமிகு அமிலமாக கருதப்படாத ஒரே ஒரு ஐதரோஆலோ அமிலமாகும். ஐதரோபுளோரிக் அமிலத்தின் செறிவு 100% ஆகும் போது ஓரின இணைவியாதல் காரணமாக அமிலத்தன்மை வியக்கத்தக்க அளவிற்கு அதிகமாகிறது:

3 HF   H2F+ + FHF

பைபுளோரைடு (FHF) எதிர் மின் அயனியானது மிக வலிமையான ஐதரசன்-புளோரின் ஐதரசன் பிணைப்பின் காரணமாக நிலைத்தன்மையைப் பெறுகிறது.

தயாரிப்பு தொகு

ஐதரோபுளோரிக் அமிலமானது புளோரைட்டு கனிமத்தினை (CaF2) அடர் சல்பூரிக் அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலமாகத் தயாரிக்கப்படுகிறது. 265 °செ வெப்பநிலையில் இந்த இரு வேதிப்பொருட்கள் இணையும் போது, அவை வினைபுரிந்து ஐதரசன் புளோரைடு மற்றும் கால்சியம் சல்பேட்டு ஆகியவற்றைப் பின்வரும் வேதி வினையின் படி தருகிறது:

CaF2 + H2SO4 → 2 HF + CaSO4

உலகளவில் HF தயாரிப்பிற்கான பொருத்தமான மற்றும் முதன்மையான மூலப்பொருளாக புளோரைட்டு இருப்பினும், HF ஆனது அபடைட்டு கனிமத்திலிருந்து பாசுபாரிக் காடி தயாரிக்கப்படும் வினையில் துணை விளைபொருளாகவும் தயாரிக்கப்படுகிறது. அபடைட்டு மூலங்கள் சிறிய விழுக்காடு புளோரபடைட்டைக் கொண்டுள்ளதாலும், இது அமிலத்தால் சிதைக்கப்படும் போது கந்தக டைஆக்சைடு (H2SO4இலிருந்து), நீர், HF மற்றும் துகள்மங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள வளிம பாய்ச்சானது வெளிப்படுகிறது. திண்மப் பொருட்கள் அனைத்தும் பிரிக்கப்பட்ட பிறகு, வளிமப் பொருட்கள் சல்பூரிக் அமிலம் மற்றும் புகையும் சல்பூரிக் அமிலம் கலந்த கலவையுடன் நீரற்ற HF ஐ விளைவிக்கும் பொருட்டு வினைப்படுத்தப்படுகிறது. HF இன் அரிக்கும் தன்மையின் காரணமாக, இதன் தயாரிப்பானது சிலிகேட்டு கனிமங்களின் கரைசலுடன் இயைந்திருக்கிறது. இதன் காரணமாக குறிப்பிடத்தக்க அளவுக்கு புளோரோசிலிசிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது.[5]

பயன்கள் தொகு

தொழிற்துறையிலும், ஆய்வுப்பணிகளிலும் ஐதரோபுளோரிக் அமிலம் பல்வேறு விதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. தொழிற்துறை வேதியியலில் தொடக்க வினைப்பொருளாகவோ அல்லது இடைநிலைப் பொருளாகவோ பயன்படுகிறது. மேலும், சுரங்கத் தொழில், சுத்திகரிப்பு, கண்ணாடி தயாரிப்பில் இறுதிநிலை வேலைகள், சிலிக்கான் சில்லு உற்பத்தி மற்றும் துப்புரவுப் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.[6]

எண்ணெய் சுத்திகரிப்பு தொகு

எண்ணெய் சுத்திகரிப்பில் காணப்படும் வழக்கமான தரம் பார்த்தல் பணிகளில் பயன்படுகிறது. உதாரணமாக, ஐசோபியூட்டேனானது குறைந்த மூலக்கூறு எடையுள்ள அல்கீன்களோடு (முக்கியமாக புரோப்பிலீன் மற்றும் பியூட்டிலீன் இவற்றின் கலவை) ஐதரோபுளோரிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட வலிமை மிகு அமிலத்தின் முன்னிலையில் அல்கைலேற்றத்தில், ஈடுபடுத்தப்படுகிறது. வினையூக்கியானது அல்கீன்களை (புரோப்பிலீன் மற்றும் பியூட்டிலீன்) வினைத்திறன் மிக்க கார்பன் நேரயனியைத் தருவதற்கு ஏதுவாக புரோட்டானேற்றம் செய்கிறது. இதன் காரணமாக, ஐசோபியூட்டேன் அல்கைலேற்றமடைகிறது. இந்த வினையானது மிதமான வெப்பநிலையிகளில் (0 மற்றும் 30 °செ) இரு நிலை வினையாக நிகழ்கிறது.

கரிமபுளோரின் சேர்மங்கள் தயாரிப்பு தொகு

கரிமபுளோரின் வேதியியலில் ஐதரோபுளோரிக் அமிலம் மிகவும் முக்கியமான பயன்களைக் கொண்டுள்ளது. பல கரிமபுளோரோ சேர்மங்கள் டெஃப்லான், புளோரோபலபடிகள், புளோரோகார்பன்கள் மற்றும் ஃப்ரியான்களைப் போன்ற குளிர் பதனூட்டிகள் தயாரிக்கும் வினைகளில் ஐதரோபுளோரிக் அமிலம் புளோரினின் மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]

புளோரைடுகள் தயாரிப்பு தொகு

மிக அதிக கொள்ளளவுள்ள கனிம புளோரைடு சேர்மங்கள் ஐதரோபுளோரிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் முதன்மையானவை Na3AlF6, (கிரியோலைட்டு), மற்றும் AlF3,(அலுமினியம் டிரைபுளோரைடு) ஆகியவை ஆகும். உருகிய நிலையில் உள்ள இந்த உலோகங்களின் கலவைகள் உலோக அலுமினியத்தைத் தயாரிப்பதற்கான உயர் வெப்பநிலைக் கரைப்பானாகப் பயன்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு புளோரைடுகள் தரும் தாக்கத்தின் காரணமாக, மாற்று தொழில்நுட்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐதரோபுளோரிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் இதர கனிம புளோரைடுகள் சோடியம் புளோரைடு மற்றும் யுரேனியம் எக்சாபுளோரைடு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Harris, Daniel C. (2010). Quantitative Chemical Analysis (8th international ). New York: W. H. Freeman. பக். AP14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1429263091. 
  2. "Hydrofluoric Acid". PubChem. National Institute of Health. பார்க்கப்பட்ட நாள் October 12, 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. பக். 921. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-022057-6. http://books.google.co.nz/books?id=OezvAAAAMAAJ&q=0-08-022057-6&dq=0-08-022057-6&source=bl&ots=m4tIRxdwSk&sig=XQTTjw5EN9n5z62JB3d0vaUEn0Y&hl=en&sa=X&ei=UoAWUN7-EM6ziQfyxIDoCQ&ved=0CD8Q6AEwBA. 
  4. Ayotte, P; Hébert, M; Marchand, P (Nov 2005). "Why is hydrofluoric acid a weak acid?". J. Chem. Phys. 123 (18): 184501. doi:10.1063/1.2090259. பப்மெட்:16292908. 
  5. 5.0 5.1 5.2 Aigueperse, J. et al. (2005) "Fluorine Compounds, Inorganic" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, எஆசு:10.1002/14356007.a11_307
  6. "CDC - The Emergency Response Safety and Health Database: Systemic Agent: HYDROGEN FLUORIDE/ HYDROFLUORIC ACID - NIOSH". www.cdc.gov. பார்க்கப்பட்ட நாள் 2015-12-04.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோபுளோரிக்_அமிலம்&oldid=2749365" இலிருந்து மீள்விக்கப்பட்டது