கடோலினியம் அசிட்டேட்டு
வேதிச் சேர்மம்
கடோலினியம் அசிட்டேட்டு (Gadolinium acetate) Gd(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். இலாந்தனைடு வகை தனிமமான கடோலினியத்தின் அசிட்டேட்டு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்ற படிகமான இது நீரில் கரையக்கூடியதாகும். நீரேற்றையும் உருவாக்கும்.[1] இதன் நான்குநீரேற்று தரை நிலை பெரோகாந்தத்தன்மையைக் கொண்டுள்ளது.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கடோலினியம் எத்தனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
16056-77-2 | |
பண்புகள் | |
Gd(CH3COO)3 | |
தோற்றம் | நிறமற்ற படிகம் அல்லது வெண் தூள் |
அடர்த்தி | 1.611 கி·செ.மீ−3 (நீரேற்று) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகடோலினியம் ஆக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தை வினைபுரியச் செய்வதன் மூலம் கடோலினியம் அசிட்டேட்டின் நான்குநீரேற்றை படிகமாக்க முடியும்:[2]
- Gd2O3 + 6 HOAc + 5 H2O → [(Gd(OAc)3(H2O)2)2]·4H2O
பண்புகள்
தொகு[Gd4(CH3COO)4(acac)8(H2O)4] என்ற அணைவுச் சேர்மத்தை மெத்தனால் கரைசலில் உள்ள மூவெத்திலமீன் முன்னிலையில் கடோலினியம் அசிடேட்டு மற்றும் அசிட்டைலசிட்டோனின் பின்னோக்கு வினையின் மூலம் பெறலாம்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Справочник химика. Vol. 2 (3-е изд., испр ed.). Л.: Химия. Редкол.: Никольский Б.П. и др. 1971.
- ↑ 2.0 2.1 Stephan T. Hatscher, Werner Urland (2003). "Unexpected Appearance of Molecular Ferromagnetism in the Ordinary Acetate [Gd(OAc)3(H2O)22⋅4 H2O"]. Angewandte Chemie International Edition 42 (25): 2862–2864. doi:10.1002/anie.200250738. பன்னாட்டுத் தர தொடர் எண்:1521-3773. பப்மெட்:12833342. https://www.onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/anie.200250738. பார்த்த நாள்: 2019-02-01.
- ↑ Fu-Sheng Guo, Ji-Dong Leng, Jun-Liang Liu, Zhao-Sha Meng, Ming-Liang Tong (2012-01-02). "Polynuclear and Polymeric Gadolinium Acetate Derivatives with Large Magnetocaloric Effect". Inorganic Chemistry 51 (1): 405–413. doi:10.1021/ic2018314. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:22145780. https://doi.org/10.1021/ic2018314. பார்த்த நாள்: 2019-02-01.