கட்டமராஜூ காவியம்

கட்டமராஜூ மன்னரைப் பற்றிய வீரம் மிக்க நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பாகும்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குடும்பத்தின் வழித்தோன்றல் என கருதப்படும் கட்டமராஜூ மன்னரின் போர் திறமைகள், ஆட்சியில் செய்த நன்மைகளை பற்றிய காவிய பாடல்களே கட்டமராஜூ காவியம் என்று அழைக்கப்படுபவையாகும். இது இம்மன்னரைப் பற்றிய வீரம் மிக்க நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பாகும். நீண்ட காலமாக ராயலசீமா பிராந்தியத்தின் நாட்டுப்புற விழாக்கள் மற்றும் கிராம கண்காட்சிகளின் போது இயற்றப்பட்ட, பாடப்பட்ட அல்லது நிகழ்த்தப்பட்ட கதைகளின் தொகுப்பாகும். இது வரை கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள், [1] சில கல்வெட்டுகள், மற்றும் செப்புத் தகடு கல்வெட்டுகளில் இந்த கதைகளின் தொகுப்புகள் கூறப்பட்டுள்ளன.

சில கல்வெட்டுகளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சுமார் 23 தலைமுறைகள் காணப்பட்டன. எனவே அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் 23 வது தலைமுறை வழித்தோன்றல் என்று நம்பப்படுகிறது, நெல்லூரின் நளமா சித்தியுடன் கடுமையான போரில் ஈடுபட்டு அந்த போரில் வெற்றி பெற்றார். அந்த போர்க் கதை பெரும்பாலும் அறிஞர்களால் சுயாதீனமாக பாடப்படும் பல அத்தியாயங்களால் ஆன பாடல்கள் என்று குறிப்பிடப்படுகிறது. [2] பெரும் போர் நடந்த பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பாலேறு ஆற்றங்கரையில், ஏராளமான கொல்ல சமூகம் ( யாதவர் ) மற்றும் கம்மவார் சாதியைச் சேர்ந்தவர்கள் கூடி ஆண்டு விழா நிகழ்ச்சி நடத்துவார்கள். அந்த விழாக்களில் இத்தகைய இதிகாச நாயகர்களின் உயிர்களைப் போற்றும் பல்வேறு பாடல்களை பாடி நினைவு கூறுவது வழக்கம். கட்டமராஜூ காவியம் அவற்றில் முக்கியமான ஒன்றாகும்.

காவியம்

தொகு

13 ஆம் நூற்றாண்டில் கட்டமராஜூ, கடுமையான வறட்சியின் காரணமாக, நெல்லூரின் விளை நிலங்களுக்கு தனது மக்களுடன் குடிபெயர்ந்தார். அங்கு அவர் நெல்லூர் அரசருடன் தனது கால்நடைகளையும் ஆடுகளையும் மேய்ப்பதற்காக உடன்படிக்கை செய்தார். ஒரு தவறான புரிதலின் காரணமாக, உடன்படிக்கை முறிந்து ஒரு மிகப்பெரிய போரில் விளைந்தது. இந்த போரானது பாலேறு ஆற்றங்கரையில் நெல்லூரை ஆண்ட நளமா சித்தியுடன் நிகழ்ந்தது. போர் புரிந்த கனிகிரியில் ஒரு தலைவரான கட்டமராஜூவின் காவியம். இதில் இரு தரப்பிலும் உள்ள பல பெரிய நாயக அந்தஸ்தை கொண்டவர்கள் தங்கள் உயிரை இழந்தனர். அனால் இறுதியில்  கட்டமராஜூ மன்னரே வெற்றி பெற்றார்.

1260-ம் ஆண்டுகளில், கனிகிரி மண்டலத்தில் உள்ள எர்ரகத்தபாடு என்ற பகுதியை அரசாண்ட மனுமசித்திக்கும் கடமராஜுக்கும் இடையே மறுபடியும் ஆபத்தான பகை ஏற்பட்டது. இரண்டு இளவரசர்களும் குறிப்பிட்ட பரந்த புல்வெளிகளை தங்கள் கால்நடைகளுக்கு மேய்ச்சல் இடமாகப் பயன்படுத்துவதற்கான உரிமை குறித்த பிரச்சினையில் ஏற்கனவே பகை இருந்தது. இது இரு தரப்பினரின் கடுமையான சண்டைக்கு வழிவகுத்து பாலேரு ஆற்றின் பஞ்சலிங்கலாவில் இரத்தக்களரி மிக்க போர் நடந்தது. கவிஞர் திக்கண்ணாவின் உறவினரான கட்கா திக்கண்ணா தலைமையிலான மனுமசித்தியின் படைகள் போரில் வெற்றி பெற்றன, இந்த சண்டையும் அதன் விளைவாக நடந்த சண்டையும் "கட்டமராஜூ கதா" என்ற பிரபலமான காவியத்தின் கருப்பொருளாக அமைந்தது. இந்த அழிவுகரமான போருக்குப் பிறகு, முதலாம்ம னுமசித்தி இறந்தார்.

இரண்டாம் மனுமசித்தியின் மரணத்துடன், நெல்லூர் பேரரசு அதன் தனித்துவத்தையும் அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் இழந்து, இரண்டாம் காகதீய பிரதாபருத்ராவின் ஆட்சியில், நெல்லூர் பகுதி காகதீய பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. மேலும் இதனால் அடிக்கடி காகத்தியர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே போர்க்களமாக மாறி பல்வேறு மன்னர்களின் கைகளுக்கு மாறி மாறி சென்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "SVU இன் கையெழுத்துப் பிரதிகள் சேகரிப்பு".
  2. "Katamaraju Kathalu Vol-Ii". Andrapradesh Sahitya Akdemi,Hyderabad. 1978.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டமராஜூ_காவியம்&oldid=3655962" இலிருந்து மீள்விக்கப்பட்டது