கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தி மற்றும் இலக்கணப்பிழைத்திருத்தி
கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தி மற்றும் இலக்கணப்பிழைத்திருத்தி சொற்பிழைகளையும் இலக்கப்பிழைகளையும் திருத்தும் ஒரு கட்டற்ற மென்பொருளை உருவாக்குவதற்காகத் தமிழ்ச் சமூகத்தின் முயற்சிகளும் அதன் விளைவுகளும்.
வரலாறு
தொகுகட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தியின் முதல் முயற்சி 2003ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தமிழா ! குழுவினர் ஓபன் ஓபிஸ் 1.1 அலுவலகத் தொகுதியின் தமிழ்ப் பதிப்பிற்காக இம்முயற்சியை மேற்கொண்டு , இதற்காக ஏறக்குறைய 11,000 சொற்களைக் கொண்ட ஒரு சொற்பட்டியலைத் தயாரித்தனர்.
ஓபன் ஒபிஸ் 1.1 சொற்பிழைகளைத் திருத்துவதற்காகப் பயன்படுத்திய ‘ மைஸ்பெல் ‘ (MySpell) என்ற பொறி, ஒற்றை பைட் குறியீட்டை மட்டுமே பயன்படுத்தியதன் காரணமாக அதனால் ஒருங்குறியில் எழுதப்படும் தமிழை ஆதரிக்க முடியவில்லை. இதனால் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. விளைவாக , ஓபன் ஓபிஸில் செயல்படும் ஒரு சொற்பிழைத்தியை உருவாக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
தமிழின் முதலாவது கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தி
தொகுஇருப்பினும் , இம்முயற்சிக்காகத் தயாரிக்கப்பட்ட சொற்பட்டியலைப் பயன்படுத்தி விஜய் என்பவர் மைஸ்பெல்லின் முன்னோடியான ‘ கனூ அஸ்பெல் ‘ (GNU Aspell)[1] என்ற பொறியில் தமிழுக்கான ஆதரவை ஏற்படுத்தினார் . அவர் உருவாக்கிய மென்பொருளே தமிழின் முதலாவது கட்டற்ற திறவூற்றுச் சொற்பிழைத்திருத்தியென நாம் கருதலாம்.
பேரகராதியில் கூடுதலான தமிழ் சொற்களை சேர்க்கும் முயற்சி
தொகுசில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழு இத்திட்டத்தைக் கையிலெடுத்து, தமிழ் பேரகராதியில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சொற்களைக் கனூ அஸ்பெல் பொறியில் சேர்த்தது[2]. இவ்வாறு கூடுதலான சொற்களைக் கனூ அஸ்பெல் பெற்ற போதிலும், அதனால் தவறாக எழுதப்பட்டிருக்கும் சொற்களுக்குப் பொருத்தமான சொற்களை ஓரளவிற்கே பரிந்துரைக்க முடிந்தது.[3]
ஹன்ஸ்பெல் பயன்பாடு மற்றும் தமிழா குழுவினரின் பங்கு
தொகுஇதற்கிடையில் , ஓபன் ஓபிஸ் அதன் 2.0.2 பதிப்பு முதற்கொண்டு மைஸ்பெல்லுக்குப் பதிலாக ஒருங்குறியை ஆதரிக்கும் ஹன்ஸ்பெல் (HunSpell)[4] என்ற சொற்பிழைத்திருத்தி பொறியைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தது . இப்பொறியைப் பயன்படுத்தி தமிழா ! குழுவினர் ஓபன் ஓபிஸ் , லிப்ரெஓபிஸ், பயர்பாக்ஸ் ஆகிய மென்பொருள்களில் செயல்படும் ஒரு சொற்பிழைத்திருத்தியை 2011 ஆம் ஆண்டு வெளியிட்டனர் . முந்தைய வெளியீடுகள் சொல் அகராதியை மட்டுமே பயன்படுத்தி சொற்பிழைகளைக் கண்டுபிடித்தன. ஹன்ஸ்பெல் சொற்பிழைத்திருத்தியோ சொற்களுடன் ஒட்டுகளை முன்னும் பின்னும் சேர்க்கும் விதிகளையும் கொண்டிருந்தது . அடிக்கடி தவறாக எழுதப்படும் சொற்களுக்கான மாற்று சொற்பட்டியலும் இத்திருத்தியில் இருந்தது .
லேங்குவேஜ் டூல் உருவாக்கம்
தொகுஇருப்பினும், இச்சொற்பிழைத்திருத்தியில் ஒரு சிக்கல் இருந்தது. ஹன்ஸ்பெல் ஒவ்வொரு சொல்லையும் தனியாகப் பார்த்ததால், அதனால் ஒற்றுப் பிழைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை . இச்சிக்கலுக்கான தீர்வு 2014 ஆம் ஆண்டுதான் கிடைத்தது . அவ்வாண்டு ‘ லேங்குவேஜ் டூல் ‘ (LanguageTool) என்ற பொறியில் தமிழுக்கான ஆதரவு தமிழா ! குழுவினரால் சேர்க்கப்பட்டது . லேங்குவேஜ் டூல் ஒற்றுப்பிழை மட்டுமின்றி சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதால் ஏற்படும் தவறுகளையும் கண்டுபிடிக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.[5]
தமிழில் சொல் திருத்தியின் தேவைகள்
தொகு- இலக்கண திருத்தி
- சந்திப் பிழை திருத்தி
- எழுத்துப் பிழை திருத்தி
பயன்பாட்டில் இருக்கும் சில கருவிகள்
தொகு- நாவி[1]
- வாணி[2]
- சர்ச்கோ[3] பரணிடப்பட்டது 2014-11-20 at the வந்தவழி இயந்திரம்