கட்டாய மத மாற்ற வழக்கு
கட்டாய மத மாற்றம் வழக்கு, இந்தியாவில் கட்டாய மதமாற்றங்களைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும் அல்லது தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டத்தில் கட்டாய மதமாற்றத்தை ஒரு குற்றமாகச் சேர்க்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஷ்வனி உபாத்யாய் என்பவர் ஒரு பொதுநல வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் மனுவில் இத்தகைய கட்டாய மதமாற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்கள், குறிப்பாக, பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டாய மதமாற்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டது என தனது மனுவில் கூறியிருந்தார்.
கட்டாய மதமாற்றப் பிரச்சினை என்பது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நடக்கும் பிரச்சனை அல்ல என்றும், இது இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனை என்றும், எனவே இதில் உச்ச நீதிமன்றத்தின் அவசரத் தலையீடு தேவை என்றும் மனுவில் கூறியுள்ளார்.
இந்த பொதுநல வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு 14 நவம்பர் 2022 அன்று நடைபெற்ற விசாரணை செய்தது. மயக்குதல் மற்றும் மிரட்டல் மூலம் இத்தகைய மதமாற்றம் செய்யப்படுவதை தீவிரமாக எடுத்துக் கொண்ட நீதிமன்றம், இதுபோன்ற மத மாற்றங்களை நிறுத்தாவிட்டால், அவை தேசிய பாதுகாப்புக்கும், குடிமக்களின் மதம் மற்றும் மனசாட்சிக்கான அடிப்படை உரிமைக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று கருத்து தெரிவித்தது.
கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ அல்லது பரிசுகள் மற்றும் பணப் பலன்களைப் பயன்படுத்தி மக்களைக் கவர்ந்திழுத்து நடத்தப்படும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக இந்திய நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. ஏமாற்றுதல், மயக்குதல் மற்றும் மிரட்டல் மூலம் இத்தகைய மதமாற்றம் செய்யப்படுவதை தீவிரமாக எடுத்துக் கொண்ட நீதிமன்றம், இதுபோன்ற மத மாற்றங்களை நிறுத்தாவிட்டால், அவை தேசிய பாதுகாப்புக்கும், குடிமக்களின் மதம் மற்றும் மனசாட்சிக்கான அடிப்படை உரிமைக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று கருத்து தெரிவித்தது.[1][2][3] [4]
இதுபோன்ற கட்டாய மத மாற்றத்தை மிகவும் தீவிரமான விஷயம் என்று கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, நிலைமை கடினமாகும் முன் அவற்றைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று கூறியது. மேலும் கட்டாய மதமாற்றமானது தேசிய பாதுகாப்பு, மத சுதந்திரம் மற்றும் மனசாட்சியின் சுதந்திரத்தை பாதிக்கும் ஒரு "மிகவும் தீவிரமான பிரச்சனை" என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதுபோன்ற கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி எம்.ஆர்.ஷா கூறுகையில், "கட்டாய மதமாற்றம் தேசத்தின் பாதுகாப்பையும் பாதிக்கும். எனவே கட்டாய மதமாற்றத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை இந்திய அரசு தெளிவுபடுத்தினால் நல்லது" என்றார்.
கட்டாய மதமாற்றம் குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தனது பதிலைத் தாக்கல் செய்ய 22 நவம்பர் 2022 வரை கால அவகாசம் வழங்கி, வழக்கை 28 நவம்பர் 2022 அன்று விசாரணைக்கு ஒத்திவைத்தது.
பின்னணி
தொகுபாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் ஏப்ரல் 2021ல் இந்திய உச்ச நீதிமன்றத்தில், கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டு எனக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ரோகிண்டன் தலைமையிலான அமர்வு இக்கோரிக்கை மனு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று கூறியது மற்றும் அஸ்வினி குமார் உபாத்தியாயா அவரது மனுவை கட்டாயப்படுத்தினால், பண அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் அஸ்வினி குமார் உபாத்தியாயா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர்நாராயணனையும் எச்சரித்துள்ளது.
அஸ்வினி குமார் உபாத்தியாயா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சங்கர்நாராயணன், 1995ஆம் ஆண்டு சரளா முத்கல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நம்பி, மதமாற்றம் தொடர்பாக ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ரெவ் ஸ்டானிஸ்லாஸ் எதிர் மத்தியப் பிரதேசம், 1977 எஸ்சிஆர் (2) 611 என்ற வழக்கில், மதத்தைப் பின்பற்றுவதற்கும் பரப்புவதற்கும் அடிப்படை உரிமையாக மதம் மாறுவதற்கான உரிமை உள்ளதா என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அப்போது உச்ச நீதிமன்றம், பிரச்சார உரிமையில் மதம் மாறுவதற்கான உரிமை இல்லை என்றும், எனவே மத்தியப் பிரதேசம் கட்டாய மதமாற்றம் தடை குறித்து இயற்றிய சட்டங்களின் அரசியலமைப்புச் செல்லுபடியை உறுதி செய்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Supreme Court on forced religious conversion
- ↑ Supreme Court concern on religious conversion: Where is the hard data on cases filed under anti-conversion laws, convictions by courts?
- ↑ கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது - உச்சநீதிமன்றம் கருத்து
- ↑ Forced conversions may ultimately affect national security, freedom of religion, Supreme Court tells Centre