அஸ்வினி குமார் உபாத்தியாயா
அஸ்வினி குமார் உபாத்தியாயா (Ashwini Kumar Upadhyay), இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், தில்லி பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும் ஆவார்.[1]
2011-இல் அண்ணா அசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கு கொண்டவர். பின்னர் ஆம் ஆத்மி கட்சி நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[2]இவர் அதிகமான பொது நல வழக்குகள் தொடர்ந்தமைக்கு புகழ்பெற்றவர்.
அஸ்வினி குமார் உபாத்தியாயா | |
---|---|
பிறப்பு | 17 மார்ச் 1975 பிரயாகை |
தேசியம் | இந்தியா |
பணி | வழக்கறிஞர் |
பொதுநல வழக்குகள்
தொகுஇந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அஸ்வினி குமார் உபாத்தியாயா சமூக, பொருளாதார பிரச்சனைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடர்ந்து வாதாடுபவர்.[3]ஆகஸ்ட் 2021ல் இவர் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மூலம், சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகள் எதுவும் திரும்பப் பெறப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.[4] .[5] உபாத்யாயா சமூக, சட்ட, நிர்வாகம் மற்றும் பரந்த அளவிலான பிற சிக்கல்கள் தொடர்பான பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து தாக்கல் செய்வதில் பெயர் பெற்றவர். கடந்த 5 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தமைக்கு தனிச்சிறப்பு இவருக்கு உண்டு.[6]இவர் தொடர்ந்த பொதுநல வழக்குகள் தொடர்ந்து அதிகமாக இருந்ததால், சூலை 2022ல், உபாத்யாயா தொடர்ந்த பொதுநல வழக்குகளுக்காக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து கூறியது.[7]
அரசியல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம்
தொகுஜன்லோக்பால் இயக்கத்தைத் தொடர்ந்து, 2018 இல் உபாத்யாய் லோக்ஆயுக்தாவுக்கான மாநில அளவிலான நியமனம் தொடர்பாக ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் விளக்கம் கேட்டது.[8]
இவர் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக பல பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு பொதுநல மனுவில் ஒன்று, தேர்தல் ரத்து செய்யப்பட்ட அல்லது செல்லாது என அறிவிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் புதிய வாக்கெடுப்புகளில் பங்கேற்பதைத் தடுக்குமாறு தேர்தல் ஆணையத்தைக் கோரியது. சாதி, மதம், சமூகம் ஆகியவற்றின் பெயரால் வாக்கு கேட்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மற்றொரு பொதுநல மனுவை இவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் இவர் வழக்கறிஞர் விஜய் அன்சாரியாவுடன் இணைந்து தாக்கல் செய்த மற்றொரு பொதுநல மனுவில், ஊழல் அரசியல் தலைவர்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை நியமிக்க வேண்டும் என்று கோரினார். உபாத்யாயா தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தக்கூடிய ஆவணங்களாக ஆக்க வேண்டும் என்று கோரப்பட்டது. [9][10][11][12] ஜனவரி 2022ல், உபாத்யாயா, தேர்தலின் போது வேட்பாளர்களின் குற்றச் செயல்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்யாத கட்சிகளின் பதிவை ரத்து செய்ய பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.[13]
மகளிர் மற்றும் குடும்பம்
தொகுகுடும்ப பிரச்சனைகள் தொடர்பாக, உபாத்யாயா பெண்களுக்கு ஒரே மாதிரியான திருமண முறிவு சட்டம் கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். மற்றொன்றில் பலதார மணம் மற்றும் இசுலாமிய சமூகத்தில் நிக்காஹ் ஹலாலா நடைமுறையை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடினார்.[14][15] மே 2021ல், நாட்டில் மக்கள் தொகை வெடிப்பைக் கட்டுப்படுத்த இரண்டு குழந்தைகள் கொள்கைக்காக ஒரு பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றார். மேலும் இந்திய அரசின் சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சகத்தை இந்த பொதுநல மனுவில் ஒரு கட்சியாக்கினார்.[16]தகவல் அறியும் உரிமை சட்டத்தை எதிர்த்து, உபாத்யாயா மதரசாக்கள் மற்றும் வேத பள்ளிகளுக்கு பொதுவான பாடத்திட்டத்தை கோரி பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.[17]
2019 ஆம் ஆண்டில், நாகாலாந்து மாநிலத்தின் திமாப்பூர் நகரத்தில் நாகா அல்லாத மக்கள் உள்நாட்டு நுழைவு அனுமதிச் சீட்டு முறையை பின்பற்றி பாதுகாப்பு கோரி இவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்தார்.[18]
சமூகம்
தொகுபிப்ரவரி 2022 இல், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறி, தமிழ்நாட்டில் ஒரு பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, எமாற்றி மத மாற்றங்களை செய்வதை ஒழுங்குபடுத்துவதற்காக உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.[19]மார்ச் 2022ல், மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண்பதற்கு, உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இதன் பொருள் இந்து சமூகம் இந்தியாவில் குறைந்தபட்சம் 10 மாநிலங்களில் சிறுபான்மை அந்தஸ்து பெற தகுதியுடையதாக உள்ளது.[20]ஏப்ரல் 2022ல், உபாத்யாயா வக்ஃப் வாரியத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.[21]
சொந்த வாழ்கை
தொகுஅஸ்வினி குமார் உபாத்தியாயா நீட்டா உபாத்தியாயாவை மணந்து இரண்டு மகன்களுக்கு தந்தையாக உள்ளார்.[22]
மேற்கோள்கள்
தொகு- ↑ "AAP founder member Ashwini Upadhyay joins BJP". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
- ↑ Jain, Ritika (2021-08-10). "Explained: Who Is Advocate Ashwini Kumar Upadhyay Ex BJP Spokesperson | BOOM". www.boomlive.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
- ↑ "PIL filed in Supreme Court against freebies by political parties". Deccan Herald (in ஆங்கிலம்). 2022-01-22. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
- ↑ "Rebel AAP MLA Kapil Mishra Sues Arvind Kejriwal for 'Low' Attendance in Delhi Assembly". News18 (in ஆங்கிலம்). 2018-06-11. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
- ↑ "SC Bars Withdrawal Of Criminal Prosecution Against MPs/MLAs Without Permission Of High Court". Legal Articles in India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ "50 pleas in 5 years for 'PIL man'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
- ↑ Kakkar, Shruti (2022-07-14). "'If Everyday You File A PIL, We'll Have To Constitute A Special Court' :Supreme Court To Ashwini Upadhyay". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-15.
- ↑ "SC seeks explanation from 12 states, UTs on appointment of Lokayukta". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-23. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
- ↑ "DNA Explainer: What if NOTA gets majority in an election? SC seeks reply from Centre, EC". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
- ↑ "Disqualify candidates using religion to get votes: Fresh PIL in Supreme Court". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
- ↑ "Fix special courts to try tainted netas: Supreme Court". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
- ↑ "PIL in SC seeks steps to regulate poll manifesto, make them legally enforceable". Firstpost (in ஆங்கிலம்). 2022-02-19. பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
- ↑ "Assembly polls 2022: Plea in SC to deregister parties not divulging criminal cases of candidates". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.
- ↑ "SC to hear plea seeking 'Uniform Divorce Law' for all women, issues notices to Centre". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
- ↑ "Plea seeking ban on nikah halala, polygamy in SC". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
- ↑ "PIL on two-child norm: SC allows plea to implead MOHFW to be a party". ca.sports.yahoo.com (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
- ↑ Jha, Prashant. "Common syllabus for Madrasas and Vedic schools: Delhi High Court issues notice to Centre in Ashwini Upadhyay plea". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
- ↑ Singh, Soibam Rocky (2019-06-23). "Plea in SC seeks protection for non-Nagas in Dimapur" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/plea-in-sc-seeks-protection-for-non-nagas-in-dimapur/article28118917.ece.
- ↑ Lawstreet. "[Lavanya Death Case] PIL Filed by Ashwini Upadhyay in SC Against Forceful Religious Conversions [Read PIL]". Lawstreet.co (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-22.
- ↑ "Hindus can be granted minority status in 10 states: Centre tells SC". Zee News (in ஆங்கிலம்). 2022-03-28. பார்க்கப்பட்ட நாள் 2022-03-31.
- ↑ "PIL in Delhi High Court challenges constitutional validity of Waqf Act". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
- ↑ "कौन हैं अश्विनी उपाध्याय ? हमेशा विवादों से रहता है जिनका नाता -" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-11. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.