திமாப்பூர்

நாகலாந்து மாநில தலைநகரம் மற்றும் மாநகராட்சியும், பெருநகரமும் ஆகும்.

திமாப்பூர், இந்திய மாநிலமான நாகாலாந்தின் தலைநகரமாகும். இது திமாசா கச்சாரி எனப்படும் அரச வம்சத்தினரின் தலைநகரமாக இருந்தது. நாகாலாந்தில் உள்ள ஒரே ஒரு விமான நிலையமும், ஒரே ஒரு தொடருந்து நிலையமும் இங்கே அமைந்துள்ளன. இந்த நகரம் நாகாலாந்தின் முக்கிய நுழைவாயில் மற்றும் வணிக மையமாகும். இங்கு காலநிலைகள் மிகவும் வரவேற்கும் வண்ணமாக உள்ளது. மொத்தம் இருபத்து மூன்று (23) மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி சபைக்கு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

திமாப்பூர் மாநகராட்சி
Dimapur
மாநகராட்சி
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்திமாப்பூர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்121 km2 (47 sq mi)
ஏற்றம்145 m (476 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்254,674
 • தரவரிசைமுதலாவது (நாகாலாந்து)
 • அடர்த்தி2,558/km2 (6,630/sq mi)
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம், நாகாமிய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்797 112
தொலைபேசிக் குறியீடு91 - (0) 03862
வாகனப் பதிவுNL-07
இணையதளம்dimapur.nic.in

போக்குவரத்து தொகு

இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கோகிமா, இம்பால், குவகாத்தி ஆகிய நகரங்களுக்கு செல்லலாம்.

இங்கிருந்து குவகாத்தி, கொல்கத்தா, புது தில்லி, பெங்களூர், சண்டிகர், அம்ரித்சர், திப்ருகர், சென்னை ஆகிய நகரங்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது.

அரசியல் தொகு

இந்த நகரம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.

இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
திமாப்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமாப்பூர்&oldid=3557981" இலிருந்து மீள்விக்கப்பட்டது