கட்டூரு நாராயணா
கட்டூரு நாராயணா (Katuru Narayana) ஓர் இந்திய இராக்கெட் விஞ்ஞானியும் சதீசு தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநரும் ஆவார்.[1] இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் இரண்டு ஏவுதள மையங்களில் சதீசு தவான் விண்வெளி மையமும் ஒன்றாகும். நாரயணா 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகித்தார்[2] அதன் பின்னர் இவர் இரண்டு இந்திய விண்வெளித் திட்டங்களான முனைய துணைக்கோள் ஏவுகலம் மற்றும் புவியிசைவுத் துணைக்கோள் ஏவு ஊர்தி ஆகியவற்றிற்கான திட்ட தயார்நிலை மறு ஆய்வுக் குழுவின் இணைத் தலைவராக பணியாற்றினார்.[3]
நாரயணா சிறீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றார்.[4] அறிவியல் மற்றும் பொறியியலில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2002 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது.[5]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Overview of Indian Space Program". Eventful. 2016. பார்க்கப்பட்ட நாள் August 22, 2016.
- ↑ "Geek Night: RocketScience". Meet Up. 2016. பார்க்கப்பட்ட நாள் August 22, 2016.
- ↑ "New Board Elected". Project Management Institute, India. 2016. Archived from the original on மே 10, 2017. பார்க்கப்பட்ட நாள் August 22, 2016.
- ↑ "SVU convocation tomorrow". தி இந்து. August 18, 2006. பார்க்கப்பட்ட நாள் August 22, 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் August 20, 2016.