ஜி. எஸ். எல். வி

ஒரு டெல்டா-II வகை செயற்கைக்கோள் ஏவு ஊர்தி

ஜி.எஸ்.எல்.வி (Geosynchronous Satellite Launch Vehicle-GSLV) - ஒரு டெல்டா-II வகை செயற்கைக்கோள் ஏவு ஊர்தி (வாகனம்) [1]; இது இஸ்ரோவினால் இயக்கப்படும் ஒரு மீளப்பாவிக்க இயலாத அமைப்பு (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பு).

ஜி.எஸ்.எல்.வி
புவியிசைவுத் துணைக்கோள் ஏவு ஊர்தி
புவியிசைவுத் துணைக்கோள் ஏவு ஊர்தி
தரவுகள்
இயக்கம் இழக்கத்தக்கதொரு ஏவு ஊர்தி
அமைப்பு இஸ்ரோ
நாடு  இந்தியா
அளவு
உயரம் 49 மீ (160 அடி)
விட்டம் 2.8 மீ (9.1 அடி)
நிறை 402,000 கிகி (886,000 பவுண்டு)
படிகள் 3
கொள்திறன்
Payload to LEO 5,000 கிகி (11,000 பவுண்டு)
Payload to
புவியிசைவு மாற்று பாதை
2,500 கிகி (5,500 பவுண்டு)
ஏவு வரலாறு
நிலை செயல்பாட்டில்
ஏவல் பகுதி சதீஷ் தாவன் விண்வெளி மையம்
மொத்த ஏவல்கள் 13 (6 மார்க் I, 7 மார்க் II)
வெற்றிகள் 8 (2 மார்க் I, 6 மார்க் II)
தோல்விகள் 3 (2 மார்க் I, 1 மார்க் II)
முதல் பயணம் 18 ஏப்ரல், 2001
Boosters (Stage 0)
No boosters 4
Engines 1 L40H Vikas 2
Thrust 680 கிலோநியூட்டன்
Total thrust 2,720 கிலோநியூட்டன்
குறித்த உந்தம் 262 நொடிகள்
எரிநேரம் 160 நொடிகள்
எரிபொருள் டைநைடிரசன் டெட்ராக்சைடு (N2O4)
First Stage
Engines 1 S139
Thrust 4,700 கிலோநியூட்டன்
குறித்த உந்தம் 166 நொடிகள்
எரிநேரம் 100 நொடிகள்
எரிபொருள் HTPB (solid)
Second Stage
Engines 1 GS2 Vikas 4
Thrust 720 கிலோநியூட்டன்
குறித்த உந்தம் 295 நொடிகள்
எரிநேரம் 150 நொடிகள்
எரிபொருள் டைநைடிரசன் டெட்ராக்சைடு (N2O4)
Third Stage
Engines 1 RD-56M
Thrust 73.5 கிலோநியூட்டன்
குறித்த உந்தம் 460 நொடிகள்
எரிநேரம் 720 நொடிகள்
எரிபொருள் திரவ ஆக்சிசன், திரவ ஐதிரசன் (LOX/LH2)

வரலாறு

தொகு

இந்தியத் துணைக்கோள்களை புவிநிலை இடைப்பாதையில் செலுத்துவதற்காக 1980-இல் துவக்கப்பட்டது இத்திட்டம் [2]: குறிப்பாக இன்சாட் II-வகை துணைக்கோள்கள். 1990-க்கு முன்னர் இத்தகைய ஏவு அமைப்புகளுக்காக ரஷ்யாவை நாடியிருந்தது இந்தியா. முதல் ஏவுதல் ஏப்ரல் 18, 2001 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 1540 கிகி நிறை கொண்ட GSAT-1 என்ற துணைக்கோளை GSLV D-1 என்ற ஊர்தியின் மூலம் நிகழ்த்தப்பட்டது.[3] ஜீயெசெல்விக்களின் முன்னோடி பீ. எஸ். எல். வி எனப்படும் துருவ செயற்கைக்கோள் ஏவு ஊர்தி ஆகும்.[1]

ஊர்தியின் கட்டமைப்பு

தொகு

ஜி. எஸ். எல். வி மூன்று பகுதிகள் கொண்ட வாகனமாகும். 49 மீ உயரமும் 414 தொன் ஏவு நிறையும் உடையது; இதன் தள்ளுசுமை-சீர்வடிவத்தின் பெரும விட்டம் 3.4 மீ. தள்ளுசுமையாக 2.5 டன் நிறையுடைய துணைக்கோள். இதன் முதல்/கீழ் பாகத்தின் உள்ளகமாக 129 டன் நிறையுடைய S125 எனப்படும் திட உயர்த்தி உள்ளது; இதைச்சுற்றி L40 எனப்படும் ஒவ்வொன்றும் 40 டன் நிறையுடைய நான்கு திரவ இணைப்பு-உயர்த்திகள் உள்ளன. இரண்டாவது அடுக்கு: 37.5 டன் நிறையுடைய திரவ உந்தி; மூன்றாவதாக, GS3 எனப்படும் கடுங்குளிர் மேல் பாகத்தில் 12 டன் நிறையுடைய திரவ ஆக்சிசனும் திரவ ஹைடிரசனும் உள்ளன.[1][4]

ஜி.எஸ்.எல்.வி-D3 (மார்க் II வகை)

தொகு

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஃது மூன்றாவது மேம்பாட்டுப் பயணம்; ஜீயெசெல்வியின் ஆறாவது பயணம். இவ்விரிசு 15 ஏப்ரல் 2010 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஏவப்பட்டது; இப்பயணத்தில் 2,220 கிகி நிறையுடைய ஜீசாட்-4 என்ற (ஆய்வுக்குரிய) தொடர்புத் துணைக்கோள் புவிநிலை இடைப்பாதையில் செலுத்தப்படுவதாக இருந்தது.[5] ஆனால், முதலிரு பாகங்களும் சரியாக எரிந்து சரியான பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் (304 விநாடிகளுக்கு பிறகு), மேல் பாகமான கடுங்குளிர் பாகத்தில் இருக்கும் முக்கிய கடுங்குளிர் இயந்திரம் சரியாக எரிந்தும், இரு வெர்னியர் கடுங்குளிர் இயந்திரங்கள் சரியாக இயங்காததால், விரிசு தன் நிர்ணயித்த பாதையில் செல்லாமல் வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது. இவ்விரு இயந்திரங்களும் தான் கடைசி பாகத்தை நிலையான பாதையில் செலுத்தவல்லன. இருப்பினும், இந்தியக் கடுங்குளிர் இயந்திரத்துடன் அடுத்த பயணம் ஒரு வருடத்திற்குள் நடக்கும் என்று இசுரோ தலைவர் கே. இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.[6].

இதில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஜீயெசெல்வி ஊர்தியும் பெங்களூருவிலுள்ள இசுரோ துணைக்கோள் மையத்தில் ஜீசாட்-4 துணைக்கோளும் கடுங்குளிர் மேலடுக்கு மகேந்திரகிரியிலுள்ள திரவ உந்துகை அமைப்பு மையத்திலும் தயாரிக்கப்பட்டன.[7] இதுவரை ஏவப்பட்டிருந்த ஐந்து ஊர்திகளும் (ஜீயெசெல்வி-மார்க் I) ரஷ்ய கடுங்குளிர் மேல் பாகத்தைக் கொண்டிருந்தன;

ஜீயெசெல்வி-D3 யின் சிறப்புகள்

தொகு
  • இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவான கடுங்குளிர் மேலடுக்கு.
  • மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு அமைப்பு, மேம்படுத்தப்பட்ட திட்டக் கணினிகள்.
  • பெரியளவிலான கூட்டுப்பொருள் தள்ளுசுமை-சீர்வடிவம்.[8]

கடுங்குளிர் மேல் பாகம்

தொகு

இப்பயணத்தில் முதன்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கடுங்குளிர் மேலடுக்கு பயன்படுத்தப்படுகிறது; இதுவரையில், ரஷ்யாவின் கடுங்குளிர் தொழில்நுட்ப உதவியோடு மேலடுக்குகள் செய்யப்பட்டன. 1992- இல் இத்தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து இந்தியா பெறுவதாக இருந்த நிலையில், அமெரிக்கா அளித்த நெருக்கடியால் ரஷ்யாவினால் அத்தொழில்நுட்பத்தை வழங்க இயலவில்லை. எனவே அத்தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கத் திட்டமிடப்பட்டு இப்போது நிறைவேறியுள்ளதாக இசுரோவின் தலைவர் கூறியுள்ளார்.[9][10] இம்மேலடுக்கும் அதிலுள்ள இயந்திரம், பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணுவியல், எரிபொருள் தொட்டி இவ்வனைத்துமே தமிழ்நாட்டின் மகேந்திரகிரியிலுள்ள திரவ உந்துகை அமைப்பு மையத்தில் உருவாக்கப்பட்டன.[11]

“இவ்வமைப்பை உருவாக்குவதற்கு பல சிக்கலான தொழில்நுட்பங்களில் நல்தேர்ச்சியடைய வேண்டியிருந்தது: குறிப்பாக, பொருள்களின் தொழில்நுட்பம், நிமிடத்திற்கு 42,000 சுழற்சிகளை மேற்கொள்ளும் சுழல் ஏற்றிகளையும் சுழலிகளையும் கடுங்குளிர் வெப்பநிலைகளில் இயக்கவல்லதொரு தொழில்நுட்பம்; மேலும் திரவ ஆக்சிசனும் திரவ ஐதிரசனும் உள்ள கடுங்குளிர் வெப்பநிலையில் உலோகங்கள் நொறுங்குந்தன்மையை அடைகின்றன. எனவே புது உலோகக்கலவைகளையும் புதிய பற்றவைத்தல் முறைகளையும் புதிய வகை உசவிகளையும் உருவாக்க வேண்டியிருந்தது” என்கிறார் இத்திட்ட இயக்குனர் ரவீந்திரநாத்.[12]

இத்தொழில்நுட்பத்தில் நல்தேர்ச்சி அடைந்துள்ளதை அடுத்து இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஜப்பான், சைனா ஆகியோர் அடங்கிய சிறந்தோர் குழுவில் சேர்ந்துள்ளது. 1994- ஆம் ஆண்டில் தொடங்கிய இத்தொழில்நுட்பப் பணியின் மொத்த செலவு தோரயமாக 334 கோடி ரூபாய்.[13]

ஜீசாட்-4

தொகு

இது 2,200 கிகி நிறையுடைய ஆய்வுக்குரிய துணைக்கோள்; இதில் ககன் என்று பெயரிடப்பட்டுள்ள வழிநடத்து தள்ளுசுமை உள்ளது. இது ஒரு நில வழிநடத்து அமைப்பாகும். இதன் மூலம் (படைத்துறை-சாராத) குடிமுறை விமானங்களுக்கும் வழிநடத்து-தொழில்நுட்பம் மேம்பாடு அடையும். மேலும் ஒரு முக்கிய ஆய்வாக Ka அதிர்வெண்-பட்டையில் இயங்கக்கூடிய மீளாக்க (சைகை) வாங்கியனுப்பி இதன் தள்ளுசுமையில் அமைந்துள்ளது.

ஏவுதல் வரலாறு

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


இதன் முதலிரு பயணங்கள், 18 ஏப்ரல் 2001 அன்று ஜிசாட்-1 செலுத்தப்படுவதற்கும் 8 மே 2003 அன்று ஜிசாட்-2 செலுத்தப்படுவதற்கும், பயன்பட்டன; இவையிரண்டுமே மேம்பாட்டுப் பயணங்கள் தாம். முதல் பயன்தரத்தக்க பயணம் 20 செப்டம்பர் 2004 அன்று ஜீயெசெல்வி எப்01 - ஆல் மேற்கொள்ளப்பட்டு எடியுசாட் தொடர்புத் துணைக்கோளை புவியிசைவு சுற்றுப்பாதையில் செலுத்தியது. அனைத்து ஜி.எஸ்.எல்.வி பயணங்களும் சிறீஅரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டன.

பயணம் வகை ஏவு நாள்/காலம் (UTC) ஏவுதளம் தள்ளுசுமை தள்ளுசுமை நிறை குறிப்புகள்
D1 GSLV Mk.I(a) 18 ஏப்ரல் 2001
10:13
முதல் தளம்   GSAT-1 1,540 கிகி இது ஒரு மேம்பாட்டுப் பயணம், மேல் பகுதி முழுமையாக செயல்படாததால் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை விடவும் குறைவான உயரத்தில் தள்ளுசுமை செலுத்தப்பட்டது. [14]
D2 GSLV Mk.I(a) 8 மே 2003
11:28
முதல் தளம்   GSAT-2 1,825 கிகி வெற்றி. இதுவும் ஒரு மேம்பாட்டுப் பயணம்
F01 GSLV Mk.I(b) 20 செப்டம்பர் 2004
10:31
முதல் தளம்   EDUSAT 1,950 கிகி வெற்றி. இதுவே முதல் செயல்பாட்டுப் பயணம்
F02 GSLV Mk.I(b) 10 சூலை 2006
12:08
இரண்டாவது தளம்   INSAT-4C 2,168 kg தோல்வி. விரிசின் பாதை திசைமாறியதால் ஊர்தி, துணைக்கோள் இரண்டுமே அழிக்கப்பட்டன[15]
F04 GSLV Mk.I(b) 2 செப்டம்பர் 2007
12:51
இரண்டாவது தளம்   INSAT-4CR 2,160 கிகி முழுமையான வெற்றியல்ல. விரிசின் குறை-செயல்பாட்டினால் புவிநெடுந்தொலைவு குறைவாகவும் சாய்வு அதிகமாகவும் ஆகின. [16][17] இருப்பினும் தள்ளுசுமை நிர்ணயிக்கப்பட்ட புவிநிலை இடைப்பாதையில் நிறுத்தப்பட்டது. [18][19]
D3 GSLV Mk.II 15 ஏப்ரல் 2010
12:57
இரண்டாவது தளம்   GSAT-4 2,220 கிகி தோல்வி.
F06 GSLV Mk.I 25 திசம்பர் 2010
10:34
இரண்டாவது  GSAT-5P 2,130 கிகி தோல்வி. திரவ எரிபொருள் பூஸ்டர் மீது கட்டுப்பாட்டை இழந்த பிறகு வரம்பு பாதுகாப்பு அலுவலரால் ஏவுகளம் அழிக்கப்பட்டது.[20]
D5 Mk.II 2014(05.01.2014)4:18 pm IST இரண்டாவது தளம்   GSAT-14 1,980 கிகி வெற்றி.[21]
D6 Mk.II 27 ஆகஸ்ட் 2015

11:22

இரண்டாவது தளம்   GSAT-6 2,117 கிகி வெற்றி [22]
F05 Mk.II 8 செப்டம்பர் 2016

11:20

இரண்டாவது தளம்   INSAT-3DR 2211 கிகி வெற்றி. முதல் செயற்பாட்டு ஏவல். INSAT-3DR ஒரு மேம்பட்ட வளிமண்டல வானிலை செயற்கைக்கோள் ஆகும்.[23]
F09 Mk.II 5 மே 2017

11:27

இரண்டாவது தளம்   GSAT-9 / South Asia Satellite 2230 கிகி வெற்றி. தெற்காசிய செயற்கைக்கோள் முன்பு SAARC சேட்டிலைட் என பெயரிடப்பட்டது.[24]
F08 Mk.II 29 மார்ச் 2018

11:26

இரண்டாவது தளம்   GSAT-6A 2140 கிகி வெற்றி. இந்த ராக்கெட் ஓர் மேம்படுத்தப்பட்ட விகாஸ் என்ஜினை இரண்டாம் படியில் பயன்படுத்தியது. அதன் திறன் 848 கிலோநியூட்டன் ஆகும். வெற்றிகரமான ஏவலுக்கு பிறகும், செயற்கைகோள் ஏவப்பட்ட 48 மணி நேரத்தின் பிறகு அது செயல்யிழந்தது.[25]
F11 Mk.II 19டிசம்பர் 2018

10:40

இரண்டாவது தளம்   GSAT-7A 2250 கிகி வெற்றி. மேம்படுத்தப்பட்ட விகாஸ் என்ஜினை இரண்டாம் படியில் பயன்படுத்தியது.[26]

சாதனை

தொகு

ஜி.எஸ்.எல்.வி., - டி5 செலுத்து வாகனம் நீண்ட முயற்சிக்குப் பின்னர் இந்திய விஞ்ஞானிகள் 05.01.2014 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளார்கள். இதன் மூலம் உலக நாடுகளில் கிரயோஜெனிக் தொழில்நுட்பம் கொண்டு செயற்கைக் கோள்களை ஏவும் நாடுகளில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது. இந்த செலுத்து வாகனம் 3 நிலைகளைக்கொண்ட இது, 1982 கிலோ எடைகொண்ட 14 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றது. இதன் திட்ட மதிப்பு 350 கோடி ஆகும். 20 ஆண்டுகள் ஆய்வில் 2 கட்ட தோல்வியைத் தொடர்ந்து தற்போது இந்தியா சாதனை புரிந்துள்ளது.[21][27]

இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள்

தொகு

செயற்கைக்கோள்/துணைக்கோள் - (artificial) satellite; ஏவு ஊர்தி - launch vehicle; மீளப்பாவிக்க இயலாத அமைப்பு (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பு) - expendable launch system; புவிநிலை இடைப்பாதை - geostationary transfer orbit; தள்ளுசுமை-சீர்வடிவம் - payload fairing; தள்ளுசுமை - payload; உள்ளகம் - core; உயர்த்தி - booster; உந்தி - propellant system; கடுங்குளிர் மேலடுக்கு - cryogenic upper stage (CUS); ஏவுதல்கள் - launches; மேம்பாட்டுப் பயணம் - developmental flight; பயன்தரத்தக்க பயணம் - operational flight; விரிசு - rocket; ஆய்வுக்குரிய - experimental; தொடர்புத் துணைக்கோள் - communications satellite; நல்தேர்ச்சி - mastery; பொருள்களின் தொழில்நுட்பம் - materials technology; சுழல் ஏற்றி - rotary pump; சுழலி - turbine; நொறுங்குந்தன்மை - brittle; பற்றவைத்தல் - welding; உசவி - lubricant; சிறந்தோர் குழு - elite group; வழிநடத்து தள்ளுசுமை - navigation payload; நில வழிநடத்து அமைப்பு - global positioning system; அதிர்வெண்-பட்டை - frequency band; சைகை - signal; வாங்கியனுப்பி - transponder; மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு அமைப்பு - advanced telemetry system; கூட்டுப்பொருள் தள்ளுசுமை-சீர்வடிவம் - composite payload fairing;

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
GSLV
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


நோக்குதவிக் குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "FAS-World Space Guide". Archived from the original on 2010-04-18. பார்க்கப்பட்ட நாள் 2010-04-11.
  2. "FAS-World Space Guide". Archived from the original on 2010-04-18. பார்க்கப்பட்ட நாள் 2010-04-11.
  3. Encyclopedia Astronautica-GSLV Chronology
  4. "ISRO Launch vehicles - GSLV". Archived from the original on 2011-08-24. பார்க்கப்பட்ட நாள் 2010-04-11.
  5. "The Hindu - GSLV-D3 to blast off on April 15". Archived from the original on 2010-04-12. பார்க்கப்பட்ட நாள் 2010-04-11.
  6. The Hindu -India's indigenous GSLV D3 rocket fails in mission[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "The Hindu - Work apace for GSLV-D3 launch". Archived from the original on 2010-04-09. பார்க்கப்பட்ட நாள் 2010-04-11.
  8. "ISRO - GSLV D3". Archived from the original on 2011-10-17. பார்க்கப்பட்ட நாள் 2010-04-14.
  9. "The Hindu - ISRO set to launch GSLV-D3". Archived from the original on 2010-04-06. பார்க்கப்பட்ட நாள் 2010-04-11.
  10. எதிர்நோக்கும் ஜி.எஸ்.எல்.வி. சவால்!
  11. "The Hindu - Work apace for GSLV-D3 launch". Archived from the original on 2010-04-09. பார்க்கப்பட்ட நாள் 2010-04-11.
  12. "The Hindu - GSLV-D3 ready for launch on April 15". Archived from the original on 2010-04-11. பார்க்கப்பட்ட நாள் 2010-04-11.
  13. "The Hindu -Indigenous cryogenic technology to take wings". Archived from the original on 2010-04-11. பார்க்கப்பட்ட நாள் 2010-04-14.
  14. Wade, Mark. "GSLV". Encyclopedia Astronautica. பார்க்கப்பட்ட நாள் 4 April 2010.
  15. ஊர்தியின் திசை மாற்றம் (ஆங்கில மொழியில்)[தொடர்பிழந்த இணைப்பு]
  16. Pradesh, Andhra (15 April 2010). "Of six GSLV launches, only two were successes". Sriharikota: Hindustan Times. Archived from the original on 5 June 2011. பார்க்கப்பட்ட நாள் 16 April 2010.
  17. Clark, Stephen (2 September 2007). "India's large satellite launcher returns to flight". Spaceflight Now. Archived from the original on 23 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2010. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  18. "INSAT-4CR successfully placed in orbit". Times of India. Archived from the original on 2007-10-15. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
  19. "GSLV-F04 Launc Successful - Places INSAT-4CR in orbit". ISRO. Archived from the original on 2009-03-01. பார்க்கப்பட்ட நாள் 2010-04-17.
  20. https://web.archive.org/web/20101226220924/http://www.hindustantimes.com/rocket-failed-after-45-seconds-says-isro/article1-642792.aspx
  21. 21.0 21.1 http://www.dinamalar.com/news_detail.asp?id=889012
  22. [=https://www.thehindu.com/news/national/geostationary-satellite-launch-vehicle-gslvd6-successfully-launched/article7587039.ece "d6"]. {{cite web}}: Check |url= value (help)
  23. https://spaceflightnow.com/2016/09/08/gslv-counting-down-to-launch-advanced-indian-weather-satellite/
  24. https://spaceflightnow.com/2017/05/06/india-launches-satellite-linking-its-south-asian-neighbors/
  25. https://economictimes.indiatimes.com/news/science/isro-says-contact-with-gsat-6a-lost-second-setback-in-seven-months/articleshow/63565348.cms
  26. https://timesofindia.indiatimes.com/india/isros-gslv-f11/gsat-7a-mission-successful-satellite-meant-for-military-applications-placed-in-orbit/articleshow/67161406.cms
  27. rockets into select club of spacefarers with successful launch of GSLV-D5
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._எஸ்._எல்._வி&oldid=3732300" இலிருந்து மீள்விக்கப்பட்டது