கணாதரர் (ஆங்கிலம்: Ganadhara), சமண சமயத் தீர்த்தங்கரரின் தலைமை மாணக்கர் ஆவார். இவர் தன் குருவான தீர்த்தங்கரின் உபதேசங்களை மக்களிடம் எடுத்துச் செல்பவர் ஆவார்.[1]

சமணச் சங்கங்கள் ஒவ்வொன்றும் கணங்கள் எனும் கணாதரர் தலைமையின் கீழ் இயங்குகிறது.[2][3]

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சு மாவட்டத்தில் தீர்த்தங்கரர்கள் மற்றும் கணாதரர்களின் சிற்பங்கள் பொ.ஊ. 20-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[4]

24 தீர்த்தங்கரர்களின் கணாதரர்கள்

தொகு
எண் தீர்த்தங்கரர் எண்ணிக்கை புகழ்பெற்ற கணாதரர்கள்
1 ரிசபதேவர் (ஆதிநாதர்) 84 விருசபா சென், கச்சா, மகா கச்சா, நாமி, விநாமி[5]
23 பார்சுவநாதர் 8 கேசி, சுபதத்தா, ஆரியகோசா, வசிஷ்டர், பிரம்மச்சாரி, சோமன், ஸ்ரீதரர், வீரபத்திரர் மற்றும் யசாஸ்
24 மகாவீரர் 11 இந்திரபூதி கௌதமன், சுதர்மசுவாமி

கணாதரர் விருசப சென்

தொகு

சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான மன்னர் ரிசபதேவரின் தலைமை மாணாக்கர் விருசப சென் ஆவார். ரிசபதேவரின் மறைவால், அவரது பட்டத்து மகன் சக்ரவர்த்தி பரதன் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார். விருசப சென் பரதனுக்கு ஆறுதல் கூறினார்.[6] பின் தன்னிலை அடைந்த பரதன், கணாதரர் விருசப சென்னின் கால்களைத் தொட்டு வணங்கி இராச்சியத்தை ஆளத் தொடங்கினார்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Jain 2008, ப. 95.
  2. "The Early Centuries of Jainism". Archived from the original on 2017-02-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  3. Jain Agama Literature
  4. Nagendra-Natha Vasu, The archaeological survey of Mayurabhanja, p. xivi
  5. Jain 2008, ப. 126.
  6. Champat Rai Jain (1929). "XI. Ganadhara Vrisabha Sen". Risabha Deva - The Founder of Jainism. K. Mitra, Indian Press, Allahabad. p. 189.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணாதரர்&oldid=4058769" இலிருந்து மீள்விக்கப்பட்டது