கணிப்பொறியில் தமிழ் (நூல்)

ஆண்ராய்டு பயன்பாட்டு விசைப்பலகை

கணிப்பொறியில் தமிழ் என்கிற கணினி தொழில்நுட்ப நூல் 112 பக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

கணிப்பொறியில் தமிழ்
நூல் பெயர்:கணிப்பொறியில் தமிழ்
ஆசிரியர்(கள்):த.பிரகாஷ்
வகை:தொழினுட்பம்
துறை:கணினி தொழினுட்பம்
இடம்:பெரிகாம் ,
(நூல் வெளியீடு மற்றும் விற்பனை),
36, அசீஸ்முல்க் இரண்டாம் தெரு,
ஆயிரம் விளக்கு,
சென்னை- 600 006.
மொழி:தமிழ்
பக்கங்கள்:112
பதிப்பகர்:பெரிகாம்
பதிப்பு:2005
ஆக்க அனுமதி:குறிப்பிடப்படவில்லை

நூலாசிரியர் தொகு

த.பிரகாஷ் என்கிற இந்த நூலாசிரியர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தமிழ் கம்ப்யூட்டர் எனும் இதழில் கணிப்பொறி குறித்து அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

அணிந்துரை தொகு

தமிழ்நாட்டில் வெளிவரும் பல தமிழ் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் கணினி தொழினுட்பம் குறித்து அதிகமான கட்டுரைகளை எழுதி வரும் மு.சிவலிங்கம் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

பொருளடக்கம் தொகு

கணிப்பொறியில் தமிழ் எனும் இந்நூலில்,

  1. கணிப்பொறியில் தமிழ்
  2. விசைப்பலகை அமைப்பு முறைகள்
  3. எழுத்துருவின் வகைகள்
  4. தமிழ் எழுத்துருக்கள்
  5. எழுத்துரு/விசைப்பலகை இயக்கியை நிறுவுதல்
  6. தமிழில் தட்டச்சு செய்யும் முறை
  7. சிக்கல்களும் தீர்வுகளும்
  8. இணையத்தில் தமிழ்
  9. தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
  10. மின்னஞ்சல்
  11. யூனிகோடு
  12. விண்டோஸ் எக்ஸ்பீயில் தமிழ்
  13. தமிழ் இணையதளங்கள்
  14. கேள்வி-பதில்

எனும் 14 பகுதிகளில் கணிப்பொறியில் தமிழ் அமைப்பு மற்றும் பயன்பாடு குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கணிப்பொறியில் தமிழ் தொகு

கணிப்பொறியில் தமிழில் தட்டச்சு செய்யத் தேவையான எழுத்துரு, விசைப்பலகை இயக்கிகள் அதற்கான மென்பொருள்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.

விசைப்பலகை அமைப்பு முறைகள் தொகு

இந்தப் பகுதியில் “தமிழ் தட்டச்சு - யளனகப” எனும் தலைப்பில் தட்டச்சு எந்திரத்தில் பயன்படுத்தப்பட்ட விசைப்பலகை முறை, “தமிழ்99 - மிக எளிதில் கற்கலாம்” எனும் தலைப்பில் “தமிழ்நெட்99” விசைப்பலகை முறை, “ஃபோனடிக்” எனும் ஒலியியல் முறையிலான விசைப்பலகை முறை, “டிரான்ஸ்லிட்டரேஷன் (ரோமனைஸ்டு)” எனும் எழுத்துப் பெயர்ப்பு முறையிலான விசைப்பலகை முறை குறித்து சுருக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் இந்த நான்கு முறைகளுக்குமான விசைப்பலகையின் படங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

எழுத்துருவின் வகைகள் தொகு

கணிப்பொறியியில் பயன்படுத்தும் எழுத்துருக்கள் வகைகளான ட்ரூ டைப் & ஏடீஎம் ஃபான்ட்கள், ஓப்பன் டைப் ஃபான்ட், யூனிகோடு ஃபான்ட், ஓப்பன் ட்ரூ டைப், கிளியர் டைப் ஃபான்ட் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ் எழுத்துருக்கள் தொகு

இந்தப் பகுதியில் டாம் மற்றும் டாப் எழுத்துருக்கள் (Tam & Tab Fonts), ஆஸ்கி (ASCII), டிஸ்கி (TSCII), இஸ்கி (ISCII) என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு/விசைப்பலகை இயக்கியை நிறுவுதல் தொகு

இந்தப் பகுதியில் விண்டோஸில் தமிழ் எழுத்துருவை நிறுவும் முறை, விசைப்பலகை இயக்கியை நிறுவுதல், இலவச தமிழ்மென்பொருள் கருவிகள் போன்றவை குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன.

தமிழில் தட்டச்சு செய்யும் முறை தொகு

தமிழில் தட்டச்சு செய்யும் வழிமுறைகள் குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கல்களும் தீர்வுகளும் தொகு

எம்.எஸ்.வேர்டில் சந்திக்கும் சிக்கல்கள் அதற்கான தீர்வுகள், எழுத்துருவை உட்பொதித்தல், அடிக்கடி நேரும் பிழைகள், பேஜ்மேக்கர், கோரல்ட்ரா, ஃப்ளாஷ் எம்எக்ஸ், இயக்குநர் எம்எக்ஸ், இணையம் என்று பல வழிகளில் வரும் சிக்கல்கள் அதை சரிசெய்யும் வழ்முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.

இணையத்தில் தமிழ் தொகு

இணையத்தில் பக்கத்தைப் புதுப்பித்தல், டயனமிக் ஃபான்ட், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், நெட்ஸ்கேப் நேவிகேட்டர், கூகிளில் தமிழில் தேடும் முறை, ழ , இணையத்தில் கற்றல் போன்றவை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொகு

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளத்திலிருந்து எழுத்துருவைப் பதிவிறக்குதல், பாடத்திட்டம், மின்நூலகம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் தொகு

தமிழில் ஈமெயில் அனுப்பும் முறை, உடனிணைப்பு மூலமாக, ஓஎஸ் வசதி, தனியார் மின்னஞ்சல் மென்பொருள், தனியார் மின்னஞ்சல் இணையதளம் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

யூனிகோடு தொகு

யூனிகோடு என்கோடிங், புதிய தமிழ் யூனிகோடு, பிரைவேட் யூஸ் ஏரியா எனும் தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் எக்ஸ்பீயில் தமிழ் தொகு

விண்டோஸ் எக்ஸ்பீயில் தமிழை உருவாக்கி தமிழில் கோப்பு உருவாக்குதல் , லினக்ஸில் தமிழ் ஆகியவை குறித்து தரப்பட்டுள்ளது.

தமிழ் இணைய தளங்கள் தொகு

தமிழ் இணையதளத்திற்கு செல்லும் போது..., என்ன செய்ய வேண்டுமென்று சில குறிப்புகள் தெரிவிக்கப்படுவதுடன் சில தமிழ் இணைய தளங்கள் குறித்த தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கேள்வி-பதில் தொகு

கணிப்பொறியிலும், இணையம் பயன்படுத்துவதிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் போது வரும் பொதுவான சில சந்தேகங்கள் கேள்வியாகத் தரப்பட்டு அதற்கு பதிலும் அளிக்கப்பட்டுள்ளன.

- இந்நூலில் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான படங்கள் அளிக்கப்பட்டிருப்பதால் எளிமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

வெளி இணைப்புகள் தொகு