கணேசர் கலை அறிவியல் கல்லூரி

கணேசர் கலை அறிவியல் கல்லூரி (பழைய பெயர்:கணேசர் செந்தமிழ்க் கல்லூரி) என்பது புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] வ. பழ. சா. பழநியப்பச் செட்டியார் அவர் தம்பி அண்ணாமலைச் செட்டியார் ஆகியோர் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் தொடர்பினால் தமிழ் வளர்ச்சிக்கும் சைவசமய வளர்ச்சிக்கும் சன்மார்க்க சபையை தொடங்கினர். இச்சபையின் ஓர் உறுப்பாக இக்கல்லூரி 1909 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[2] கணேசர் செந்தமிழ்க் கலாசாலை என்ற பெயரிலிருந்து பிற்காலத்தில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி என்றும் பின்னர் கணேசர் கலை அறிவியல் கல்லூரி என்றும் பெயர் பெற்றது.

கணேசர் கலை அறிவியல் கல்லூரி
Ganesar Senthamil Kalloori
வகைபொது
உருவாக்கம்1909
முதல்வர்மு.செல்வராஜு
அமைவிடம்
மேலைச்சிவபுரி
, ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்https://ganesarcollege.edu.in/

வகுப்புகள்

தொகு

தொடக்கத்தில் இலக்கண இலக்கிய வகுப்புகள் மட்டும் நடத்தி வந்தனர். பின்னர் 1915 ஆம் ஆண்டு முதல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசம், பாலபண்டிதம், பண்டிதம் ஆகிய தேர்வுக்குரிய பாடங்களும் நடத்தப்பட்டன. 1939 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பெற்று, அதன் வித்துவான் வகுப்புகளை நடத்தியது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வித்துவான் வகுப்பு தொடங்கிய முதல் கல்லூரி என்ற பெருமை இக்கல்லூரிக்கு உண்டு. 1982 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பெற்ற போது இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றது. 1987 முதல் முதுகலை வகுப்புகளும், ஆய்வியல் நிறைஞர் வகுப்புகளும் நடைபெறுகின்றன. 1994 இல் மாலை நேரக் கல்லூரியில் இளங்கலை வணிகவியலும், இளங்கலை அறிவியலும் தொடங்கப்பட்டன.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

தொகு


முன்னை முதல்வர்கள்

தொகு
  • முனைவர் பழ.முத்தப்பன்

மேற்கோள்கள்

தொகு
  1. "தீண்டத் தகாதது ஆகிவிட்டதா தமிழ்?: தவிக்கும் தமிழ்க் கல்லூரிகள்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/3956--1.html. பார்த்த நாள்: 20 October 2023. 
  2. நகரத்தார் கலைக்களஞ்சியம். மெய்யப்பன் தமிழாய்வகம். p. 93. {{cite book}}: |access-date= requires |url= (help)
  3. "முடியரசன் வாழ்க்கைக் குறிப்பு". த.இ.க. பார்க்கப்பட்ட நாள் 20 October 2023.