கணேந்திர நாராயண் ராய்

இந்திய நீதிபதி

கணேந்திர நாராயண் ராய் (Ganendra Narayan Ray) இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி ஆவார். 1933 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். குசராத்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். [1] [2]

கணேந்திர நாராயண் ராய்
Ganendra Narayan Ray
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில்
7 அக்டோபர் 1991 – 30 ஏப்ரல் 1998
தலைவர், இந்தியப் பத்திரிகையாளர் மன்றம்
பதவியில்
11 மார்ச்சு 2005 – 4 அக்டோபர் 2011
குசராத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
2 திசம்பர் 1990 – 7 அக்டோபர் 1991
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1933 (1933-05-01) (அகவை 91)
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

மாநிலக்கல்லூரி, இசுகாட்டிசு பேராலயக் கல்லூரி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை ஆகியவற்றில் ராய் கல்வி பயின்றார். [2] [3] [4]

தொழில்

தொகு

1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இவர் குசராத்து உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். [1] 1991 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். [2] [4] தற்போது கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக்கில் வசிக்கிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Incumbency List". Archived from the original on 19 June 2009. பார்க்கப்பட்ட நாள் 10 January 2013.
  2. 2.0 2.1 2.2 Hon'ble Mr. Justice G.N. Ray
  3. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume. Scottish Church College, April 2008. page 592
  4. 4.0 4.1 Press Council of India details
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேந்திர_நாராயண்_ராய்&oldid=3773271" இலிருந்து மீள்விக்கப்பட்டது