கணேஷ் கோஷ்
கணேஷ் கோஷ் (Ganesh Ghosh) (22 சூன் 1900 - அக்டோபர் 16, 1994)[1] ஓர் வங்காள இந்திய சுதந்திர இயக்க ஆர்வலர், புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
கணேஷ் கோஷ் Ganesh Ghosh | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1967-70 | |
தொகுதி | தெற்கு கல்கத்தா |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1951–1967 | |
பின்னவர் | லட்சுமி சரன் சென் |
தொகுதி | பெல்கச்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிட்டகொங், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா | 22 சூன் 1900
இறப்பு | 16 அக்டோபர் 1994 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 94)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
இளமை்காலம்
தொகுகணேஷ் கோஷ் வங்காளதேசத்தில் உள்ள சிட்டகொங்கில், சூன் 22, 1900 ஆம் ஆண்டில் பிறந்தார். 1922 ஆம் ஆண்டில், அவர் கல்கத்தாவில் வங்கிக் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்விக் கற்றார். பின்னர், அவர் சிட்டகாெங்கில் உள்ள யுகாந்தர் கட்சியின் உறுப்பினரானார். 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தியதி சூரியா சென் மற்றும் பிற புரட்சியாளர்களுடன் சேர்ந்து சிட்டகொங் ஆயுதப் படைத் தாக்குதலில் ஈடுபட்டார்.[2] அவர் சிட்டகொங்கில் இருந்து தப்பிச் சென்று ஹூக்ளி, சந்தன்நகரில் தஞ்சம் அடைந்தார். சில நாட்கள் கழித்து காவல்துறை அணையர் சார்லஸ் டெகார்ட் சந்தன்நகரில் அவர் தங்கியிருந்த வீட்டை தாக்குதல் நடத்தி இவரை கைது செய்தார். அப்போது ஒரு இளம் சக புரட்சியாளரான ஜீபான் கோஷல், அலிஸ் மாக்கன் என்பவர்கள் தாக்குதல் நடத்தியதில் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர்.
விசாரணைக்குப் பின்னர், கணேஷ் கோஷ் 1932ல் போர்ட் பிளேரில் உள்ள சிற்றறைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1946இல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக ஆனார். சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் கட்சியின் தலைவராக ஆனார். 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்ட பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (மார்க்சிஸ்ட்) வழிநடத்தியார். 1952, 1957 மற்றும் 1962 ஆண்டுகளில் பெல்காச்சியாவின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மேற்கு வங்க சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 ஆம் ஆண்டில் கல்கத்தாவின் தென் மக்களவை தொகுதியிலிருந்து இந்திய மார்க்சிஸ்ட் வேட்பாளராக நான்காவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1971 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கல்கத்தாவின் தென்பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் இந்த முறை 26 வயதான ப்ரியா ரஞ்சன் டாஷ் முனிஷால் தோற்கடிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sangshad Bangali Charitabhidhan, Editor: Anjali Basu, 2nd part, 4th Edition, Sahitya Sangshad, 2015, Kolkata
- ↑ Chandra, B & others (1989). India's Struggle for Independence 1857-1947, New Delhi: Penguin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780140107814, p.251-2