கணேஷ் ராகவேந்திரா
கணேஷ் ராகவேந்திர (Ganesh Raghavendra) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பின்னணி இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
கணேஷ் ராகவேந்திரா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 02 jan.1979 இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 2009 – தற்போது வரை |
இந்தியாவின் கொல்கத்தாவில் கொல்கத்தா அண்ட் எல் ஏஜ் டி'ஓர் இண்டர்நேசனல் ஆர்த்ஹவுஸ் திரைப்பட விழாவில் (LIAFF) கல்ட் கிரிடிகிட் திரைப்பட விருதுகளில் விண்வெளி பயணக் குறிப்புகள் படத்தின் இசைக்காக இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.
தொழில்
தொகுகணேஷ் ராகவேந்திரா தனது தொழில் வாழ்க்கையை ரசிகப்பிரியா என்ற இசைக்குழுவுடன் தொடங்கினார். பின்னர் இவர் பக்திப் பாடல்கள், குறும்படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். இவரது முதல் படம், ரேனிகுண்டா (2009), இவருக்கு நேர்மறையான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து படம் பார்த்து கதை சொல் . ஆச்சரியங்கள் (2012). [1] [2] பின்னர் விஜய் வசந்த் நடித்த மதில் மேல் பூனை (2013), தன்சிகா நடித்த திறந்திடு சீசேம் (2015) போன்ற படங்களில் பணியாற்றினார்.
இசைத்தொகுப்பு வரலாறு
தொகுஆண்டு | திரைப்படப் பெயர் | குறிப்புகள் |
---|---|---|
2009 | ரேனிகுண்டா | |
2011 | படம் பார்த்து கதை சொல் | |
2012 | பொற்கொடி பத்தாம் வகுப்பு | மறு ஒலிப்பதிவு மட்டும் |
2012 | ஆச்சரியங்கள் | |
2012 | அகிலன் | |
2013 | மதில் மேல் பூனை | |
2014 | முருகற்றுப்படை | |
2015 | பீடி | |
2015 | திறந்திடு சீசேம் | |
2017 | சதுர அடி 3500 | |
2018 | விண்வெளி பயணக் குறிப்புகள் | கொல்கத்தா அண்ட் எல் ஏஜ் டி'ஓர் இண்டர்நேசனல் ஆர்த்ஹவுஸ் திரைப்பட விழாவில் (LIAFF) கல்ட் கிரிடிகிட் திரைப்பட விருதுகளில் விண்வெளி பயணக் குறிப்புகள் படத்தின் இசைக்காக இரண்டு விருதுகளை வென்றுள்ளது. |
2017 | பாடம் | |
2018 | மெர்லின் | |
2019 | அசுரகுரு | |
2019 | பட்லர் பாலு | |
2019 | கருதுக்களை பதிவு செய் | |
2021 | மஞ்ச சட்ட பச்ச சட்ட |