கண்டியின் செனரத்

செனரத்தின அல்லது செனரத் (Senarat) 1604 முதல் 1635 வரை கண்டி அரசை ஆண்ட மன்னர் ஆவார். முதலாம் விமலதருமனுக்கு அடுத்தபடியாக சேனரத் கண்டியை ஆண்டதாககச் சொல்லப்பட்டாலும், விமலதருமனின் மரணத்துக்குப் பின்னர் என்ன நிகழ்ந்தது, எவ்வாறு சேனரத் மன்னர் ஆனார் என்ற தகவல்கள் தெளிவில்லை. விமலதருமனின் சகோதரன் அல்லது ஒன்றுவிட்ட சகோதரன் எனக் கூறப்படுகிறது.[1] இறந்த மன்னரின் மனைவி, தொன் கதரீனாவை மட்டுமன்றி, அவளது இரு மகள்மாரையும் மணந்த இவர் கண்டி வரலாற்றில் புதிராகவே விளங்குகின்றார். இவர் சிவனொளிபாத மலையில் பூசாரியாகப் பணியாற்றினார் எனவும், தொன் கதரீனாவை மணக்கும் பொருட்டு பூசாரித் தொழிலைக் கைவிட்டு கண்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.[1]

செனரத்
கண்டி மன்னர்
ஆட்சி1604–1635
முன்னிருந்தவர்விமலதர்மசூரியன் I
பின்வந்தவர்இராஜசிங்கன் II
மனைவிகள்
வாரிசு(கள்)குமாரசிங்க அஸ்தானன்
விஜயபாலன்
மகாஸ்தானன்
மரபுதினராஜ வம்சம்
பிறப்புஇலங்கை
இறப்பு1635
இலங்கை
அடக்கம்இலங்கை

ஆட்சி

தொகு

இவரது ஆட்சியில் அடிக்கடி போர்த்துக்கேய ஆக்கிரமிப்புகளும் உள்ளூர் கிளர்ச்சிகளும் கண்டியைப் பாதித்ததாகத் தெரியவருகின்றது.[2] ரந்தெனிவலையில் நிகழ்ந்த போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடித்த இவரது பெறாமகன் குமாரசிங்கனது வீரம் வெகுவாகப் பாராட்டப்படுகின்றது. எனினும், இவரை அடுத்து வாரிசுரிமைச் சிக்கல் வந்தபோது, தந்திரமாகத் தன் இரு பெறாமக்களைத் தவிர்த்துவிட்டு, இராஜசிங்கனை முடிசூட்டினார்.[3] அவர்கள் இருவரும் சிலகாலத்துக்குள்ளாகவே மர்மமாக இறந்தனர்.

கற்பிட்டிப் பகுதியில் போர்த்துக்கீசரால் பெருமளவு அச்சுறுத்தல்களைச் சந்தித்த சோனகர் இவரிடம் அடைக்கலம் கோர, இவர் கிழக்கிலங்கையின் மட்டக்களப்புப் பகுதியில் அவர்களைக் குடியேற்றுவித்தார்.[4]

மேலும் காண

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. 1.0 1.1 Siebel, J. B. (ஒக்ரோபர் 1954). The Journal of the Dutch Burgher Union 44 (4): 164. JDBU. பார்த்த நாள்: மே 8, 2020. 
  2. Kandy Fights the Portuguese, C.Gaston Perera, Vijithayapa Publications,2007
  3. Anuradha Seneviratna, Nimal De Silva, Madhyama Saṃskr̥tika Aramudala (Sri Lanka) (1999). World heritage city of Kandy, Sri Lanka: conservation and development plan Issue 282 of Publication. Central Cultural Fund. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789556131260.
  4. Spolia Zeylanica: Geology, zoology, anthropology. Colombo Museum. 1965.
கண்டியின் செனரத்
பிறப்பு: ? ? இறப்பு: ? 1635
முன்னர் கண்டி மன்னன்
1604–1635
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டியின்_செனரத்&oldid=2966826" இலிருந்து மீள்விக்கப்பட்டது