கண்ணகிபுரம்

கண்ணகிபுரம் என்பது இலங்கையில் ஒலிபரப்பாகும் ஒரு வானொலித் தொடர் நாடகம் ஆகும். யங் ஏசியா தொலைக்காட்சி நிறுவனம் இந்நாடகத்தைத் தயாரித்து ஒலிபரப்புகிறது. இந்நாடகம் 2009, ஆகத்து 5 ஆம் திகதி முதல் கண்ணகிபுரம் என்ற பெயரில் தமிழிலும் கண்ணகிபுர என்ற பெயரில் சிங்களத்திலும் புதன் மற்றும் வெள்ளிக்கிழைமைகளில் ஒலிபரப்பி வருகின்றது.

கண்ணகிபுரம்
Typeவானொலி நாடகம்
Countryஇலங்கை
Availabilityதேசிய அளவில்
Ownerயங் ஏசியா தொலைக்காட்சி
Launch date
2009 ஆகத்து 5
Official website
http://www.kannagipuram.com

இலங்கையில் வாழும் மக்களுக்கிடையே சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்பவற்றை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கண்ணகிபுரம் வானொலி நாடகம். நீண்டகாலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த போர் முடிவுக்கு வந்தபின்னர் மக்கள் உளவியல் ரீதியாக எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நாடகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே யதார்த்த பூர்வமான கண்ணகிபுரம் என்ற ஒரு கிராமத்தை உருவாக்கி அதற்கு ஏற்புடைய வகையில் கதாபாத்திரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நாடகத்தொடர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய, வர்த்தக சேவைகளிலும் பிராந்திய ஒலிபரப்புச் சேவைகளான ரஜரட்ட எப்.எம்., கந்துரட்ட எப்.எம்., வயம்பஹன்ட, கொத்மலை எப்.எம்., பிறை எப்.எம்., மற்றும் யாழ்.எப்.எம் ஆகிய சேவைகளில் வாரத்திற்கு இரு தடவைகள் ஏககாலத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 6.45 மணிமுதல் 7 மணிவரையில் ஒலிபரப்ப்படுகின்றது. தென்றல் எப்.எம். சேவையில் அதேநாட்களில் பிற்பகல் 5.45 மணிமுதல் 6 மணிவரை ஒலிபரப்பாகி வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணகிபுரம்&oldid=3129724" இலிருந்து மீள்விக்கப்பட்டது