கண்ணி (தலைமாலை)

கண்ணி என்பது ஆண்கள் தலையில் சூடிக்கொள்ளும் பூமாலை.
கழுத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்துகொள்வது மாலை. பூமாலை, மணிமாலை போன்றவை இதன் வகைகள்.

கண்ணி
  • குடிக்கு உரிய அடையாளப் பூவாக இது சூடிக்கொள்ளப்படும்.
    • கூவிளங்கண்ணி கொடும்பூண் எழினி [1]
    • நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே {சோழன்)[2]
    • குல்லைக் கண்ணி வடுகர் முனை [3]
    • கண்ணி கார்நறுங் கொன்றை (சிவன்) [4]
  • போர்க் காலங்களில் என்ன போர் என்பதைக் காட்டும் அடையாளப் பூவாகவும் இது சூடிக்கொள்ளப்படும்.

அடிக்குறிப்பு தொகு

  1. புறநானூறு 158
  2. புறநானூறு 46
  3. குறுந்தொகை 11
  4. புறநானூறு கடவுள் வாழ்த்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணி_(தலைமாலை)&oldid=1888688" இலிருந்து மீள்விக்கப்பட்டது