கண்வலி
கன்ஜக்டிவாவினில் ஏற்படும் தொற்றினை கன்ஜக்டிவிடிஸ்(Conjunctivitis)(அ)கண்வலி என்கிறோம். தொற்று ஏற்படுவதினால்,கன்ஜக்டிவாவினில் உள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணிய இரத்த நாளங்கள் பருமனாகி விடுகிறது. இப்பாதிப்பினால் கண் சிவப்பாகுதல், கண் அழற்சி, மற்றும் பாதிக்கப்பட்ட கண்ணிலிருந்து பொருள் வெளியேறுதல் ஏற்படுகிறது. பொதுவாக சிறுவர்களுக்கு தொற்று மூலமாகவும் பெரியவர்களுக்கு ஒவ்வாமை மூலமாகவும் கன்ஜக்டிவிடிஸ் ஏற்படுகிறது. இவை இரண்டு வகைப் படும், ஒன்று தொற்று விழி வெண்படல அழற்சி, மற்றொன்று ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி.
அறிகுறிகள் :
தொகுஎல்லா வகையான கன்ஜக்டிவிடிஸ்களிலும், கண் சிவப்பாகுதல், எரிச்சல், உறுத்தல், பொருள் வெளியேறுதல் மற்றும் ஒளி விரும்பாமை (கடணிtணிணீடணிஞடிச்) தொற்று கன்ஜக்டிவிடிஸில் சீழ் வெளித்தள்ளப் படுகிறது. இதனால் காலையில் விழிக்கும் பொழுது கண் இமைகள் ஒன்றொடொன்று ஒட்டிக் கொள்கின்றன. ஒவ்வாமை கன்ஜக்டிவிடிஸில் கண் இமைகள் வீங்கி நிறமற்ற பொருளை வெளித்தள்ளுகின்றன.
சிகிச்சை :
தொகுவெதுவெதுப்பான நீர் உபயோகித்து கண் இமைகளுடன் ஒட்டியுள்ள வெளித்தள்ளியுள்ள பொருள்களை நீக்க வேண்டும். நோய் தொற்றுதலைச் சரிசெய்ய கண் சொட்டு மருந்து அல்லது நோய் எதிர்ப்பு மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். ஒவ்வாமை கன்ஜக்டிவிடிஸ் நோயைக் குணப்படுத்த ஆன்டி ஹிஸ்டமைன் கலந்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம்.