கண் நிறம் ஒரு பலஜீன்(Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில்(Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மணிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது. மணிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் யூமெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்.பறவையின் கண்களின் நிறம் பியூரின்கள்(Purine),டெரிடின்கள்(Pteridine) போன்ற நிறப்பொருட்களினால் ஏற்படுகின்றது.

கண் நிறத்தின் நிர்ணயம் தொகு

கண்களின் நிறம் ஒன்றும் மேற்பட்ட ஜீன்களால் நிர்ணயிக்கப்படும் மரபுரீதியான குணம் ஆகும். இரு பெரும்பாண்மையான ஜீன்களும் ஒரு சிறுபாண்மை ஜீனும் சேர்ந்து கண்களில் நிறத்தை நிர்ணயக்கின்றன. மனிதர்களின் இந்த மூன்று ஜீன்களும் முறையே EYCL1, EYCL2, மற்றும் EYCL3 என அழைக்கப்படுகின்றனர். இந்த மூன்று ஜீன்களும் முறையே பழுப்பு,பச்சை மற்றும் நீல நிறத்தை நிர்ணயிப்பவை. குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாத காலத்துக்குள் கண்களின் நிறம் நிலையாக நிர்ணயக்கப்பட்டுவிடுகிறது.

நிறங்களின் பிரிவினைகள் தொகு

 
ஒரே கண் நிறம் சூழ்நிலை வேறுபாடுகளினால் வெவ்வேறு நிறங்களாக தெரியலாம்

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கண்களின் நிறம் கருப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது.

கண்களின் வெவ்வேறு நிறங்கள்

  • பழுப்பு
  • செம்பழுப்பு(Hazel)
  • பச்சை
  • நீலம்
  • சாம்பல்
  • செங்கருநீலம்(Violet)
  • செம்மஞ்சள்(Amber)


வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eyes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்_நிறம்&oldid=3237932" இலிருந்து மீள்விக்கப்பட்டது