நிரப்பு கணம்
கணக் கோட்பாட்டில், ஒரு கணத்தின் நிரப்பு கணம் அல்லது நிரப்பி (complement set, complement) என்பது அக்கணத்தில் இல்லாத உறுப்புகளின் கணமாகும்.
- A , B என்ற இரு கணங்களை எடுத்துக் கொண்டால், B ஐப் பொறுத்து A இன் நிரப்பி என்பது, A இல் இல்லாத ஆனால் B இல் உள்ள உறுப்புகளின் கணம். இது சார் நிரப்பு கணம் எனப்படும்.
- A மற்றும் தேவைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட எல்லா கணங்களையும் உட்கணங்களாகக் கொண்ட கணம் U அவற்றின் அனைத்து கணம் எனப்படும். இந்த அனைத்து கணத்தைப் பொறுத்து A இன் நிரப்பு கணம் என்பது, A இல் இல்லாத ஆனால் U இல் உள்ள உறுப்புகளின் கணம் ஆகும். இந்த நிரப்பு கணம் தனி நிரப்பு கணம் (absolute complement) எனப்படும்.
சார் நிரப்பி
தொகுA , B இரு கணங்கள் எனில்,B ஐப் பொறுத்து A இன் சார் நிரப்பி என்பது, A இல்லாத ஆனால் B இல் உள்ள உறுப்புகளின் கணம்[1]. இக்கணம் B , A இன் கணக் கோட்பாட்டு வித்தியாசம் (set-theoretic difference) அல்லது வேறுபாட்டுக் கணம் எனவும் அழைக்கப்படுகிறது[2].
ISO 31-11 தரப்படி இதன் குறியீடு B ∖ A
எடுத்துக்காட்டுகள்
தொகு- {1,2,3} ∖ {2,3,4} = {1}
- {2,3,4} ∖ {1,2,3} = {4}
- If மெய்யெண்களின் கணம்; விகிதமுறு எண்களின் கணம் எனில்:
- = விகிதமுறா எண்களின் கணம்.
பண்புகள்
தொகுசேர்ப்பு, வெட்டு ஆகிய கணச் செயலிகளுடன் சார் நிரப்பியின் சில பண்புகள்:
A, B, C மூன்று கணங்கள் எனில் கீழ்வரும் முற்றொருமைகள் உண்மையாகும்:
- C ∖ (A ∩ B) = (C ∖ A)∪(C ∖ B)
- C ∖ (A ∪ B) = (C ∖ A)∩(C ∖ B)
- C ∖ (B ∖ A) = (C ∩ A)∪(C ∖ B)
(மாற்று வழி: A ∖ (B ∖ C) = (A ∖ B)∪(A ∩ C) )
- (B ∖ A) ∩ C = (B ∩ C) ∖ A = B∩(C ∖ A)
- (B ∖ A) ∪ C = (B ∪ C) ∖ (A ∖ C)
- A ∖ A = Ø
- Ø ∖ A = Ø
- A ∖ Ø = A
தனி நிரப்பி
தொகுஅனைத்து கணம் U வரையறுக்கப்பட்டால், U இல் A இன் சார் நிரப்பி கணம் A இன் தனி நிரப்பி கணம் ஆகும். அதன் குறியீடு Ac அல்லது A′. U நிலையானது எனில், இந்த நிரப்பி கணம் அல்லது எனவும் குறிக்கப்படும்[3]:
- Ac = U ∖ A.
எடுத்துக்காட்டாக, முழு எண்களின் கணத்தை அனைத்து கணமாகக் கொண்டால், ஒற்றை முழுஎண்கள் கணத்தின் நிரப்பி கணமாக இரட்டை முழுஎண்களின் கணமாகும்.
பண்புகள்
தொகுசேர்ப்பு, வெட்டு ஆகிய கணச் செயலிகளுடன் தனி நிரப்பியின் சில பண்புகள்:
U இன் உட்கணங்கள் A, B எனில், கீழ்வரும் முற்றொருமைகள் உண்மையாகும்:
- த மோர்கனின் விதி:[1]
- நிரப்பி விதிகள்:[1]
- சுருள்வு அல்லது இரட்டை நிரப்பி விதி:
- சார் நிரப்பிக்கும் தனி நிரப்பிக்குமுள்ள தொடர்பு:
- கண வித்தியாசத்துடன் தொடர்பு:
முதல் இரண்டு நிரப்பி விதிகளிலிருந்து,
- U இன் வெற்றற்ற, முறையான உட்கணமாக A இருந்தால், {A, Ac} என்பது U இன் பிரிவினை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- Halmos, Paul R. (1960). Naive set theory. The University Series in Undergraduate Mathematics. van Nostrand Company. Zbl 0087.04403.
- Devlin, Keith J. (1979). Fundamentals of contemporary set theory. Universitext. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-90441-7. Zbl 0407.04003.
- Bourbaki, N. (1970). Théorie des ensembles (in french). Paris: Hermann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-34034-8.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
வெளியிணைப்புகள்
தொகு- Weisstein, Eric W., "Complement", MathWorld.
- Weisstein, Eric W., "Complement Set", MathWorld.