கதிகே கடற்கரை

இந்ந்ந்ந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது

கதிகே கடற்கரை (Kadike Beach) இந்தியாவின் கர்நாடகா மாநிலம்உடுப்பி மாவட்டத்தில் உள்ள பதனிதியூர் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை மல்பே கடற்கரையிலிருந்து 3.5 கிமீ தொலைவில் உள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் , கர்நாடகாவின் கடற்கரையோரத்தில் உள்ள முக்கிய மீன்பிடித் துறைமுகமாகவும் உள்ளது.

அசரே கடற்கரை பூங்கா

தொகு

துர்காம்பா யுவக விருந்தா மற்றும் மகிளா விருந்தா என்ற கிராமத்தைச் சேர்ந்த சமூக இளைஞர் அமைப்பினரின் தன்னார்வத் தொண்டர்கள் கதிகே கடற்கரைக்கு அருகில் தனித்துவமான கடற்கரைப் பூங்காவைக் கட்டியுள்ளனர். பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் அந்த அமைப்பின் தன்னார்வலர்களால் கடற்கரைக்கு அருகில் உருவாக்கப்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் மண்டலம் பொழுது போக்கு பூங்காவாக மாற்றப்பட்டது. [1] [2]

அசரே கடற்கரைப் பூங்கா ₹ 18 இலட்சம் செலவில் கட்டப்பட்டது. இது எந்த அரசாங்க உதவியும் இல்லாமல் மக்களால் கொண்டு வரப்பட்டது. பூங்காவில் 6.5 அடி உயர இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை, 15 கற்காரை பெஞ்சுகள், குடிசைகள், ஊஞ்சல்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடத்தில் ஒரு சாய்வு தளம் போன்றவை இடம்பெற்றுள்ளன. [3]

சோதனை அலை மின் நிலையம்

தொகு

சுசி உலகாய ஆய்வு மையத்தின் பொறியாளரும் தலைவருமான விஜய் குமார் எக்டே ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று கதிகே கடற்கரையிலிருந்து 250 மீட்டர் தொலைவில் அலை மின் நிலையம் ஒன்றை நிறுவினார். இந்த அமைப்பு ஏழு அடி உயர மேடையில் இரண்டு அடி விட்டம் மற்றும் நான்கு அடி நீளம் கொண்ட உருளை இணைக்கப்பட்டது. அலைகளின் மின்னோட்டத்தின் காரணமாக இந்த உருளை மிதக்கிறது, இதையொட்டி இணைக்கப்பட்ட கருவிகள் பொறிமுறையை இயந்திரத்தனமாக இயக்குகிறது [4] [5]

இந்த சோதனைத் திட்டத்தில் 5 வாட்கள் கொண்ட 19 பல்புகள் இணைக்கப்பட்டன, அவை உருவாகும் அலை ஆற்றலின் விளைவாக ஒளிரும். தொழில்நுட்பம் 2006 ஆம் ஆண்டு காப்புரிமையைப் பெற்றது. ஆனால் அதிக அலைகள் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே இது பொருத்தமானதாக இருக்குமென வழங்கப்பட்டது. [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Udupi: Youngsters turn garbage pile into beautiful park". www.daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
  2. Udayavani. "Malpe: Garbage disposal site transformed into a beach park". Udayavani (in கன்னடம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
  3. ಸುದ್ದಿಜಾಲ, ವಿಜಯವಾಣಿ. "ತ್ಯಾಜ್ಯ ಕೊಂಪೆ ಆಯ್ತು ಪಾರ್ಕ್, ಸ್ಥಳೀಯರಿಂದಲೇ ನಿರ್ಮಾಣ –" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
  4. "Kemmannu.com | Experimental Tidal Power Project launched at Kadike Beach, Kemmannu". www.kemmannu.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
  5. Karnataka, Headline. "ಸಮುದ್ರದ ಅಲೆಗಳಿಂದ ವಿದ್ಯುತ್ ; ಕೆಮ್ಮಣ್ಣು ಬಳಿ ಉತ್ಪಾದನಾ ಘಟಕ !". Headline Karanataka (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Karnataka: Riding the wave: Udupi firm pitches for tidal power plant". Bangalore Mirror (in ஆங்கிலம்). 14 Aug 2017. பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிகே_கடற்கரை&oldid=3626654" இலிருந்து மீள்விக்கப்பட்டது