கதீஜா
Kadhija the first wife of Muhammad
(கதிஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கதீஜா அல்லது கதீஜா பிந்த் குவைலித் (Khadīja bint Khuwaylid, அரபு மொழி: خديجة بنت خويلد, அண். 555 – பொ.ஊ 620) என்று அழைக்கப்படும் கதீஜா(ரலி) குப்ரா அவர்கள் இவ்வுலகின் இறுதித்தூதரின் முதல் மனைவியாவார்.[2]
கதீஜா(ரலி) (خديجة بنت خويلد) முகம்மது நபியின் மனைவி
| |
---|---|
பிறப்பு | கி.பி.555 மக்கா (இன்றைய சவூதி அரேபியாவில்) |
இறப்பு | கி.பி.620[1] |
சமயம் | இசுலாம் |
பெற்றோர் | தந்தை: குவைலித் இப்னு அசாத்.தாயார்: பாத்திமா பின்த் ஸாஇதா |
வாழ்க்கைத் துணை | முகம்மது நபி(ஸல்) |
பிள்ளைகள் | மகன்கள்:
மகள்கள்:
|
இஸ்லாத்தின் அடிப்படையில் ‘உம்முஹாத்துல் முஃமினீன்’(இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்)என்றும் அழைக்கப்படுபவர்.[3]
செல்வ சீமாட்டியான இவர்,முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நீதத்தாலும்,நேர்மையாலும் கவரப்பட்டு அண்ணலாரை திருமணம் புரிந்தார். நபிகளுக்கு வஹி வந்ததை யாரும் நம்பாதபோது, முதன்முதலில் நம்பி முஸ்லிமானார்.பிள்ளைச் செல்வங்களை நபிகளுக்கு அளித்தார். இறுதிவரை நபிகளாருக்கு உற்ற உறுதுணையாக வாழ்ந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sayyid Ali Ashgar Razwy. "The Birth of Muhammad and the Early Years of his Life". பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.
- ↑ Wife of the Prophet Muhammad பரணிடப்பட்டது அக்டோபர் 14, 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ அல்-குர்ஆன் 33:6 [1]