கதிரியக்கத் தொடர்
அணுக்கருவியலில், கதிரியக்கத் தொடர் (radioactive series அல்லது decay chain) என்பது கதிரியக்கம் காரணமாகப் புதிதாகத் தோன்றும் சேய்த் தனிமமும் நிலையற்றதாக இருக்குமாயின் அதுவும் கதிரியக்கச் சிதைவிற்கு உள்ளாகித் தொடர் தேய்விற்கு உள்ளாகும் நிகழ்வு ஆகும். இவ்வாறே நிலையான தனிமம் தோற்றுவிக்கப்படும் வரை கதிரியக்கம் தொடரும். இந்நிகழ்வில் தோன்றும் ஓரிடத்தான்கள் (ஐசோடோப்பு) அனைத்தும் ஒரு கதிரியக்கத் தொடர் அல்லது ஒரு கதிரியக்கக் குடும்பம் எனப்படுகிறது.
ஒரு தாய் ஓரிடத்தான் தேய்ந்து சேய் ஓரிடத்தான் ஆகின்றது. இந்த சேய் ஒரு நிலையான தனிமமாகவும் இருக்கலாம், அல்லது இது மேலும் தேய்ந்து அதனது சேய் ஓரிடத்தானாக மாறவும் முடியும். ஒரு சேய் ஓரிடத்தானில் இருந்து உருவாகும் ஓரிடத்தான் பெயர்த்தி ஓரிடத்தான்" (granddaughter isotope) என அழைக்கப்படுகிறது..
கதிரியக்கத் தோரியத் தொடரில் 90 தோரியம் 232 இல் (232Th) தொடங்கி, காரீய ஐசோடோப்பான காரியம் 208 (208Pb.) உடன் முடிவடைகிறது. இதுபோல் யுரேனியத் தொடரும் ஆக்டினியத் தொடரும் நெப்டூனியம் தொடரும் உள்ளது.
யுரேனியம் 238 கதிரிக்கத் தொடர்-
தனிமம் | குறியீடு | அணு எண் | அணு நிறை | வெளிப்படும் துகள் | வளிமத்தில் செல்தொலைவு | அரை வாணாள் |
---|---|---|---|---|---|---|
யுரேனியம் | U | 92 | 238 | α | 2.7 செ. மீ. | 4.5*10^9 வருடம் |
தோரியம் | Th | 90 | 234 | β | 24.5 நாள்கள் | |
புரோட்டோஆக்டினியம் | Pa | 91 | 234 | β | 1.14 நிமி | |
தோரியம் | Th | 90 | 230 | α | 3.19 | 83,00 0 வரு |
ரேடியம் | Ra | 88 | 226 | α | 4.12 | 1600 வரு |
ரேடான் | Rn | 86 | 222 | α | 4.12 | 3.83 நா |
பொலோனியம் | Po | 84 | 218 | α | 4.72 | 3.05 நிமி |
ஈயம் | Pb | 82 | 214 | β | எடுத்துக்காட்டு | 26.8 நிமி |
பிசுமத் | Bi | 83 | 214 | α,β | எடுத்துக்காட்டு | 19.7 நிமி |
பொலோனியம் | Po | 84 | 214 | α | எடுத்துக்காட்டு | 10^6 செக |
தாலியம் | Tl 81 210 β 1.32 ;sks | |||||
ஈயம் | Pb | 82 | 210 | β | 22 வரு | |
பிசுமத் | Bi | 83டு | 210 | β | 5 நா | |
பொலோனியம் | Po | 84 | 210 | α | 3.92 | 140 நா |
ஈயம் | Pb | 82 | 206 | நிலையானது | டு | இல்லை இத்தொடர் (N+2) தொடர்என்று அறியப்படும்..அணுநிறையை 4 ஆல் வகுத்தால்N+2 என்று கிடைக்கும். |
இது போல் தோரியம் தொடரை அடியில் காட்டி இருப்பது போல் குறிக்கலாம் 90 தோ232.[1][2][3]
மேலும் கதிரியக்க அக்டீனியத் தொடரும் உள்ளது 92 அக் 235 .உள்ளது
மேற்கோள்கள்
தொகு- ↑ Bromm, Richard B. Larson, Volker. "The First Stars in the Universe". Scientific American (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Morita, Kosuke; Morimoto, Kouji; Kaji, Daiya; Akiyama, Takahiro; Goto, Sin-Ichi; Haba, Hiromitsu; Ideguchi, Eiji; Kanungo, Rituparna et al. (2004). "Experiment on the Synthesis of Element 113 in the Reaction 209Bi(70Zn, n)278113". Journal of the Physical Society of Japan 73 (10): 2593–2596. doi:10.1143/JPSJ.73.2593. Bibcode: 2004JPSJ...73.2593M.
- ↑ Barber, Robert C.; Karol, Paul J; Nakahara, Hiromichi; Vardaci, Emanuele; Vogt, Erich W. (2011). "Discovery of the elements with atomic numbers greater than or equal to 113 (IUPAC Technical Report)". Pure and Applied Chemistry 83 (7): 1485. doi:10.1351/PAC-REP-10-05-01.