கதிர்காம மாலை
கதிர்காம மாலை சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்த்துறையில் இடம்பெற்றுள்ள, கதிர்காம முருகனைப் போற்றும் சுவடி நூலாகும்.
சிறப்பு
தொகுமாலை வகை சிறுநூல்கள் சொல்லழகும் பொருளழகும் பெற்று விளங்கும். மாலை என்று அழைக்கப்படுகின்ற பிரபந்தத்தின் பொருளைப் பற்றி எண்ணும்போது பூக்களால் தொடுக்கப்படுகின்ற மாலையை நினைவில் கொள்ளலாம். ஒரேவித பூக்களைக் கொண்டும் மாலை தொடுக்கலாம். பல்வேறு பூக்களையும் தழைகளையும் கொண்டும் மாலை தொடுக்கலாம். அவ்வாறே ஒரே பொருளை முன்னிட்டு அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து ஒரே வகைப் பாவைக் கொண்டும் ஒரு நூலைப் பாடலாம் அல்லது பல்வேறு பாவினங்களைக் கொண்டும் பாடலாம். [1]
கதிர்காம ஆறுமுகம்
தொகுகதிர்காம ஆறுமுகம் மேல் மாலை பாட அருள் வேண்டுமாய் உமையாள் ஈன்றெடுத்த கணபதி வேண்டி நிற்கும் காப்புச் செய்யுளுடன் தொடங்குகிறது. [1] நான்கு அடிகளைக் கொண்ட 30 பாடல்களுடன் இம்மாலை அமைந்துள்ளது. இப்பாமாலையில் ஒரு பாடலைக் காண்போம். [2]
“ | என்னெஞ்சம் நானுமிடை ஞ்சல் படுந்துயரம் உன்னெஞ் சரியாதோ உண்மையெனக் கேயுரையாய் |
” |
ஏட்டை வைத்திருந்தவர்
தொகுஇந்த ஏட்டுச்சுவடியின் முதல் ஏட்டில் சுடலைமுத்து சுவடி என்ற குறிப்பு உள்ளதால், இச்சுவடியை வைத்திருந்தவர் பெயர் சுடலை முத்து என்பவராக இருக்கலாம்.[1]