கதை சொல்லியின் கதை (நூல்)

கதை சொல்லியின் கதை என்பது ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இந்த நூலில் கழனியூரன் எழுதிய 19 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கு வட்டார வாசம் என்னும் தலைப்பில் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மதிப்புரை எழுதியிருக்கிறார். இதில் இந்நூலில் உள்ள கதைகளை, “வாசிப்பாளனிடம் பாதிப்பை நடவு செய்யும் கதைகள் இவை”[1] எனக்குறிப்பிட்டு உள்ளார். வாக்குமூலம் என்னும் தலைப்பில் கழனியூரன் முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், “விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்ற எங்கள் வட்டாரத்து மக்களின் கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளை, நாட்டார் தரவுகளை, பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை இத்தொகுப்பில் உள்ள கதைகளில் பதிவு செய்ய முயன்றிருக்கின்றேன்” என்று கூறியிருக்கிறார்.[2]

கதை சொல்லியின் கதை
நூல் பெயர்:கதை சொல்லியின் கதை
ஆசிரியர்(கள்):கழனியூரன்
வகை:சிறுகதைகள்
துறை:இலக்கியம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:120
பதிப்பகர்:தாமரைச்செல்வி பதிப்பகம்
1280 (31/48) இராணி அண்ணா நகர்
சென்னை
பதிப்பு:முதற்பதிப்பு திசம்பர் 2000
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

பொருளடக்கம் தொகு

வ.எண் கதை வெளியிட்ட இதழ்
01 கழிவு கணையாழி – ஆகத்து 1996
02 ஒரு கதைசொல்லியின் குரல் புதிய பார்வை – ஆகத்து 1996
03 சர்புதீன் பக்கிரிஷா முஸ்லீம் முரசு – ஏப்ரல் 1998
04 நாகக்கன்னி
05 விடைத்தேடும் வினாக்கள் ஜனவரி 1997
06 வேரும் வேரடி மண்ணும்
07 தெவக்கம் முஸ்லீம் முரசு – ஜனவரி 1995
08 வித்தை முங்காரி – மே 1999
09 விடலைப்பிள்ளைகள் வாசுகி – ஏப்ரல், 1995
10 இத்தா முஸ்லீம் முரசு – செப்டம்பர் 1996
11 ஒரு கதை சொல்லியின் கதை பூங்குயில் – மே, 1996
12 காட்டுப் பூவின் வாசம் சுந்தரசுகன் – செப்டம்பர் 1997
13 சாவு முதல் பொற்கிளி – மார்ச் 1996
14 அம்மா முஸ்லீம் முரசு – மே 1997
15 தொடரும் வாசுகி – 16 – 30 செப்டம்பர் 1997
16 சம்சாரி பொற்கிளி – ஆகத்து 1998
17 கடிதம் பொற்கிளி – நவம்பர் 199
18 கந்துவட்டி பொற்கிளி – அக்டோபர் 1998
19 விதைத்தது

சான்றடைவுகள் தொகு

  1. [கழனியூரன்; கதை சொல்லியின் கதை; சென்னை, தாமரைச்செல்வி பதிப்பகம்; திசம்பர் 2000; பக்.7]
  2. [கழனியூரன்; கதை சொல்லியின் கதை; சென்னை, தாமரைச்செல்வி பதிப்பகம்; திசம்பர் 2000; பக்.8]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதை_சொல்லியின்_கதை_(நூல்)&oldid=2776738" இலிருந்து மீள்விக்கப்பட்டது