பா. செயப்பிரகாசம்

தமிழ் எழுத்தாளர்

பா. செயப்பிரகாசம் (பி. 1941) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். மூன்றாவது முகம், இரவுகள் உடைபடும் ஆகிய தொகுப்புகள் சூரியதீபன் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் தலைவர்களுள் ஒருவராக விளங்கினார்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._செயப்பிரகாசம்&oldid=3249223" இருந்து மீள்விக்கப்பட்டது