முதன்மை பட்டியைத் திறக்கவும்

பெருமாள் முருகன்

பெருமாள் முருகன் (பி. 1966) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் பெற்றோர் பெருமாள், பெருமாயி. தன் தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துப் ”பெருமாள்முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஏழு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் வெளியாகியுள்ளன. அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பெருமாள்முருகன்

பிறப்பு முருகன்
1966
கூட்டப்பள்ளி
புனைப்பெயர் இளமுருகு
தொழில் தமிழ்ப் பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர்
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியர்
http://www.perumalmurugan.com/

வெளியான நூல்கள்தொகு

நாவல்கள்தொகு

 1. ஏறுவெயில்-1991[1]
 2. நிழல்முற்றம்-1993[2]
 3. கூளமாதாரி-2000[3]
 4. கங்கணம்-2007[4]
 5. மாதொருபாகன்-2010 [5]
 6. ஆளண்டாப்பட்சி - 2012[6]
 7. பூக்குழி - 2013
 8. ஆலவாயன் - 2014
 9. அர்த்தநாரி - 2014
 10. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - 2016
 11. கழிமுகம் - 2018

சிறுகதைத் தொகுப்புகள்தொகு

 1. திருச்செங்கோடு-1994
 2. நீர் விளையாட்டு-2000
 3. பீக்கதைகள்-2006
 4. வேப்பெண்ணெய்க் கலயம் - 2012
 5. பெருமாள்முருகன் சிறுகதைகள் - 2016

கவிதைத் தொகுப்புகள்தொகு

 1. நிகழ் உறவு-1991
 2. கோமுகி நதிக்கரைக் கூழாங்கல்-2000
 3. நீர் மிதக்கும் கண்கள்-2005
 4. வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - 2012
 5. கோழையின் பாடல்கள் - 2016
 6. மயானத்தில் நிற்கும் மரம் - 2016

அகராதிதொகு

 1. கொங்கு வட்டாரச் சொல்லகராதி 2000

கட்டுரைகள்தொகு

 1. ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை-2000
 2. துயரமும் துயர நிமித்தமும்-2004
 3. கரித்தாள் தெரியவில்லையா தம்பி-2007
 4. பதிப்புகள் மறுபதிப்புகள்-2011
 5. கெட்ட வார்த்தை பேசுவோம்-2011
 6. வான்குருவியின் கூடு - 2012
 7. நிழல்முற்றத்து நினைவுகள் - 2012
 8. சகாயம் செய்த சகாயம் - 2014
 9. நிலமும் நிழலும் - 2018

மொழிபெயர்ப்புகள்தொகு

 1. SEASONS OF THE PALM 2004 (கூளமாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.கீதா)
 2. CURRENT SHOW 2004 (நிழல்முற்றம் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.கீதா)
 3. ONE PART WOMAN 2013 (மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : அனிருத்தன் வாசுதேவன்)
 4. PYRE (பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : அனிருத்தன் வாசுதேவன்)
 5. POONAACHI OR STORY OF A BLOCK GOAT (பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு : கல்யாண்ராமன்)

பதிப்புகள்தொகு

 1. கொங்குநாடு (தி.அ.முத்துசாமிக் கோனார்)
 2. பறவைகளும் வேடந்தாங்கலும் (மா.கிருஷ்ணன்)
 3. சாதியும் நானும் (அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு)
 4. கு.ப.ரா. சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)

தொகுப்பாசிரியர்தொகு

 1. பிரம்மாண்டமும் ஒச்சமும்
 2. உடைந்த மனோரதங்கள்
 3. சித்தன் போக்கு (பிரபஞ்சன்)
 4. கொங்குச் சிறுகதைகள்
 5. தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்
 6. உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்
 7. தீட்டுத்துணி (அறிஞர் அண்ணா )

விருதுகள்தொகு

 1. விளக்கு விருது 2012
 2. கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது 2013
 3. கதா விருது 2000
 4. கனடா இலக்கியத் தோட்ட விருது - அபுனைவுப் பிரிவு 2011
 5. சிகேகே அறக்கட்டளை விருது
 6. அமுதன் அடிகள் விருது
 7. மணல் வீடு விருது
 8. களம் விருது
 9. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
 10. லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை விருது
 11. தேவமகள் விருது

சர்ச்சைதொகு

இவர் 2010இல் எழுதி பதிப்பித்த மாதொருபாகன் நாவல் பன்னாட்டு நிறுவனமான போர்ட் பௌண்டேஷனுக்குத் தொடர்புள்ள நிறுவனமான இந்தியா பௌண்டேஷன் ஃபார் ஆர்ட்ஸிடம் நிதி பெற்று,[7] வரலாற்றாதாரமற்ற நிகழ்வுகளை வரலாற்று நாவல் என்றெழுதி, திருச்செங்கோடு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகப் பல்வேறு வரலாற்றறிஞர்களும்[8] அமைப்புகள் அந்நாவலுக்கு 2015இல் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இனி எந்த நாவலையும் கட்டுரையும் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதுவதில்லை எனவும், இனி மாதொருபாகன் மற்றும் அவர் எழுதிய எந்த நாவலையும் வெளியிடவேண்டாம் என்றும், விற்காமல் உள்ள நாவல்களைப் பதிப்பகத்தார் தன்னிடம் கொடுத்தால் உரிய தொகையைக் கொடுத்துவிடுவதாகவும், பெருமாள்முருகன் என்பவன் இறந்துவிட்டதாகவும், தமிழ் ஆசிரியரான பெ. முருகன் மட்டும் இருப்பதாகவும் திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் பொது மன்னிப்புக் கடிதம் எழுதித்தந்து, முகநூலில் தெரிவித்தார்.[9][10][11][12] ஒரு சாதியைச் சார்ந்த குழந்தை இல்லாத தம்பதிகளான காளி, பொன்னா பற்றியது இக்கதை. குழந்தை இல்லாததால் திருச்செங்கோட்டு தேர்த் திருவிழாவில் அடுத்த ஆணுடன் உறவு கொண்டு பொன்னா குழந்தை பெற முயல்வது போல் கதை எழுதப்பட்டுள்ளது.[13]

ஆதரவுதொகு

எழுத்தாளர் இரா. பெருமாள்முருகனை 2015 சனவரி 12 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு என்று அழைத்து “மாதொரு பாகன்’’ நூலின் பிற்கால பிரதிகளைதிரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் புதிய பதிப்பு வந்தாலும் திருச்செங்கோடு குறித்த விவரங்கள் இருக்கக்கூடாது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. இது அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. ஒப்பந்தம் என்றாலும் உடன்பாடு என்றாலும் அது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது.[14].[15]

மேற்கோள்கள்தொகு

 1. பெருமாள்முருகன். ஏறுவெயில். விடியல் பதிப்பகம், 1996 - 287 pages - Google books. பக். 287. http://books.google.com/books/about/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html?id=_pJkPAAACAAJ. 
 2. காலச்சுவடு - தமிழ்பேப்பர் விமர்சனம்
 3. கூளமாதாரி - விளிம்பு நிலை மனிதர் வாழ்வை விலாவாரியாகச் சித்திரிக்கும் பெருமாள் முருகனின்
 4. காலச்சுவடு
 5. காலச்சுவடு
 6. காலச்சுவடு ஆறு நூல்கள் வெளியீடு
 7. http://www.indiaifa.org/perumalmurugan.html
 8. https://m.youtube.com/results?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&sm=3
 9. "பெருமாள் முருகன் செத்துவிட்டான்': எழுத்தாளர் உருக்கமான அறிக்கை". தினமலர். பார்த்த நாள் 14 சனவரி 2015.
 10. "Who 'killed' Indian author Perumal Murugan?". BBC. பார்த்த நாள் 14 சனவரி 2015.
 11. "செத்துவிட்டான் பெருமாள் முருகன் : சமூக தளத்தில் எழுத்தாளரின் உருக்கமான அறிக்கை". தினமணி. பார்த்த நாள் 14 சனவரி 2015.
 12. "Perumal Murugan gives up writing". The Hindu. பார்த்த நாள் 14 சனவரி 2015.
 13. "Why Perumal Murugan's "One Part Woman" is Significant to the Debate on Freedom of Expression in India". CaravanMagazine. பார்த்த நாள் 14 சனவரி 2015.
 14. "எழுத்தாளர் பெருமாள் முருகனை நிர்ப்பந்தம் செய்து போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமுஎகச வழக்கு". தீக்கதிர் (20 சனவரி 2015). பார்த்த நாள் 20 சனவரி 2015.
 15. பெருமாள் முருகனின் ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_முருகன்&oldid=2807120" இருந்து மீள்விக்கப்பட்டது