ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஆங்கிலம்: Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research), சுருக்கமாக ஜிப்மர்(JIPMER) என்றழைக்கப்படும் இந்நிறுவனம் புதுச்சேரியில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்நிறுவனம், இந்திய நடுவணரசின் நிதியுதவியுடன் இயங்குகிறது. இந்நிறுவனம் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கல்லூரியில் பயில்கின்றனர்.

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
கல்விக்கூட வளாகம்
குறிக்கோளுரைVeritas Curat
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Truth Cures
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்சனவரி 1, 1823 மற்றும் சூலை 13, 1964
நிதிக் கொடைஆண்டுக்கு ரூ 300 கோடி ($65 மில்லியன்)
தலைவர்டாக்டர் வி.எம்.கடோச்
துறைத்தலைவர்டாக்டர் பங்கச் குன்ட்ரா
பணிப்பாளர்டாக்டர் ராகேஷ் அகர்வால்
கல்வி பணியாளர்
350 (சுமார்)
நிருவாகப் பணியாளர்
3000 (சுமார்)
பட்ட மாணவர்கள்150 (ஆண்டுக்கு)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்200 (ஆண்டுக்கு)
36 (ஆண்டுக்கு)
அமைவிடம்புதுச்சேரி, இந்தியா
11°57′17″N 79°47′54″E / 11.95472°N 79.79833°E / 11.95472; 79.79833ஆள்கூறுகள்: 11°57′17″N 79°47′54″E / 11.95472°N 79.79833°E / 11.95472; 79.79833
வளாகம்நகர்ப்புறம், 195 ஏக்கர்கள் (0.79 km2)
இணையதளம்www.jipmer.edu

இந்நிறுவனம் 3000 பணியாளர்களையும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 150 இளநிலை மாணவர்களையும், 200 முதுகலை மாணவர்களையும் சேர்த்துக் கொள்கிறது. பாண்டிச்சேரி முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் சோ. தட்சணாமூர்த்தி முதலியார் அவர்களின் சீரிய முயற்சியால் இம்மருத்துவமனை உருவானது.[1] [2][3]

மேற்கோள்கள்தொகு