கந்தக இருபுளோரைடு
கந்தக இருபுளோரைடு (Sulfur difluoride) என்பது SF2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட கந்தகத்தின் ஆலைடு சேர்மம் ஆகும். கந்தக இருகுளோரைடு மற்றும் பொட்டாசியம் புளோரைடு அல்லது பாதரச(II) புளோரைடு இரண்டும் சேர்ந்து வினைபுரிவதால் கந்தக இருபுளோரைடு உருவாகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சல்ஃபாக்சிலிக் இருபுளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
13814-25-0 | |||
ChemSpider | 123122 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 139605 | ||
| |||
பண்புகள் | |||
SF2 | |||
வாய்ப்பாட்டு எடை | 70.062 கி/மோல் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
- SCl2 + 2 KF → SF2 + 2 KCl
- SCl2 + HgF2 → SF2 + HgCl2
கந்தக இருபுளோரைடில் உள்ள F-S-F பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 98° மற்றும் S-F பிணைப்புகளின் நீளம் 159 பைக்கோ மீட்டர்[1] என்ற அளவுகளில் காணப்படுகிறது. FSSF3 என்ற அமைப்பில் காணப்படும் சேர்மம் நிலைப்புத்தன்மை இல்லாமல் காணப்படுகிறது. S2F4 இன் இந்தச் சீர்மையற்ற மாற்றீயம், இரண்டாவது SF2 மூலக்கூறின் S-F பிணைப்பில் SF2 நுழைவதால் உருவாகிறது[2].
ஆக்சிசன் இருபுளோரைடு மற்றும் ஐதரசன் சல்பைடு இரண்டையும் சேத்து வினைபுரியச் செய்வதாலும் இதைத் தயாரிக்க முடியும்.
- OF2 + H2S → SF2 + H2O
மேற்கோள்கள்
தொகு- ↑ Johnson, D. R.; Powell, F. X. (1969). "Microwave Spectrum and Structure of Sulfur Difluoride". Science 164 (3882): 950–1. doi:10.1126/science.164.3882.950. பப்மெட்:17775599.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.