கந்தர் (பௌத்தம்)

கந்த(ஸ்கந்த) போதிசத்துவர் சீன பௌத்த மதத்தினரால் வணங்கப்படும் போதிசத்துவரும் பௌத்த மடாலயங்களின் பாதுகாவலரும் ஆவார். இவர் தர்மத்தையும் அதன் தொடர்புடைய அனைத்து பொருள்களையும் பாதுகாக்கின்றார். இவர் 24 பாதுகாவற்போதிசத்துவர்களுள் ஒருவர். மேலும் சதுர்மகாராஜாக்களுகடைய 32 தளபதிக்கு தலைமை தளபதியாய் இவர் விளங்குகிறார்.

கந்த போதிசத்துவர்

கூறுகள்

தொகு

பெரும்பாலான கோவில்களில், இவரது உருவம் கருவறையில் உள்ள புத்த விக்ரகத்தை நோக்கி இருக்கும். பிற ஆலயங்களில் இவர் கருவறையின் வலது புறம் காணப்படுவார். இவரது இடது புறமாக சங்கிராம போதிசத்துவரை காணலாம். சீன சூத்திரங்களில், இவரது உருவம் சூத்திரத்தில் இறுதியில் காணப்படும். புத்த போதனைகளை போற்றி பாதுகாப்பது என்ற கந்தரின் உறுதிமொழியை இது நினைவுகூறுவதாக அமைந்துள்ளது.

பௌத்த புராணங்களின் படி, கந்தர் புத்தரின் போதனைகளின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த ஒர் அரசனின் மகன் ஆவார். புத்தர் பரிநிர்வானம் அடைகையில், கந்தரை தர்மத்தை காக்கும் படி பணித்தார். அன்றிலிருந்த கந்தரின் பணி தர்மத்தை பாதுகாத்தலும், மாரனின் பிடியில் இருந்து பௌத்த சங்கத்தை காப்பாற்றுவதும் ஆகும்.

புத்தர் இறந்த சில நாட்களின், அவரது திருவுடற்பகுதிகள் அசுரர்களால் திருடப்பட்டது. கந்தர் அவரது உறுதிமொழியின் படி, அசுரர்களை வீழ்த்தி புத்தரது திருவுடற்பகுதிகளை மீட்டார்.

சீன புராணங்களில் கந்தர்

தொகு

கந்தர் எவ்வாறு சீன போதிசத்துவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பதற்கு அதிகாரப்பூர்வ கதைகள் இல்லை. கந்தர் இந்து மதக் கடவுளான முருகனின் தாக்கத்தால் பௌத்தத்தில் இவர் தோன்றியிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். ஏனெனில் இருவருக்கும் கந்தர் என்பது பொதுப்பெயராக உள்ளது கவனிக்கத்தக்கது. வேறு சிலர் இவர் வஜ்ரபாணியின் அம்சமாக இருக்கலாம் என கருதுகின்றனர்.(இருவரும் வஜ்ராயுதம் ஏந்தி உள்ளதால்)

சித்தரிப்பு

தொகு

கந்தர் ஒரு இளம் சீன தளபதியைப் போல் சித்தரிக்கப்படுகிறார். பெரும்பாலும் தனது வஜ்ரதண்டத்தின் மீது இவர் சாய்ந்துகொள்ளும் நிலையில் காணப்படுகிறார். கந்தரை வஜ்ரபாணியை போல் சித்தரிக்கும் வழக்கமும் உள்ளது. கந்தர் வருங்காலத்தில் புத்தர் நிலையை அடைய இருப்பதால், கந்தர் ஒரு தேவகனமாக இருப்பினும், போதிசத்துவராகவே அழைக்கப்படுகிறார்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கந்தர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தர்_(பௌத்தம்)&oldid=3956978" இலிருந்து மீள்விக்கப்பட்டது