கனக் சாகா
கனக் சாகா (Kanak Saha) என்பவர் இந்திய வானியல் இயற்பியலாளர் ஆவார். இவர் பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம் வானியற்பியல் இணைப் பேராசிரியராக உள்ளார். இவரது ஆராய்ச்சி ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் விண்மீன் திரள்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின் பரிணாமம் ஆகியவையாகும்.[1] இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் வழங்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை 2021ஆம் ஆண்டு இவரது இயற்பியல் ஆய்வு பங்களிப்பிற்காக வழங்கியது.[2][3]
கனக் சாகா | |
---|---|
பிறப்பு | கூச் பெகர், மேற்கு வங்காளம் |
தேசியம் | இந்தியர் |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
விருதுகள் | |
இணையதளம் www |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுகனக் சாகா மேற்கு வங்காளத்தில் உள்ள கூச் பெஹாரில் பிறந்தார். சாகா 1998-ல் இசுகாட்லாந்து தேவாலய கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் இயற்பியலில் பெற்றார். இவர் முது அறிவியல் பட்டத்தினை 2001-ல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும் 2008ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தினை இந்திய அறிவியல் நிறுவனத்தில் பெற்றார்.[3]
விருதுகள்
தொகு2021ஆம் ஆண்டில், வானியல் செயற்கைக்கோளினைப் பயன்படுத்தி அதிக சிவப்பு நிறத்தில் மங்கலான விண்மீனைக் கண்டுபிடித்ததற்காக சாகாவுக்கு இயற்பியல் அறிவியல் பிரிவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு வழங்கப்பட்டது.[1][2][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "IUCAA scientist among 2021 Shanti Swarup Bhatnagar winners". The Indian Express (in ஆங்கிலம்). 2021-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
- ↑ 2.0 2.1 Shanti Swarup Bhatnagar Prize (SSB) for Science and Technology 2021. ssbprize.gov.in. 2021-03-26. Retrieved 2021-09-30.
- ↑ 3.0 3.1 "Meet the Indian researcher uncovering clues to the formation of the galaxies". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-03-26. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
- ↑ "Awardee Details: Shanti Swarup Bhatnagar Prize". ssbprize.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.