கனக் லதா சிங்

இந்திய அரசியல்வாதி

கனக் லதா சிங் (Kanak Lata Singh)(பிறப்பு: 1 சனவரி 1962, தியோரியா உத்தரப் பிரதேசம்) சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1]

கனக் இலதா சிங்
Kanak Lata Singh
நாடாளுமன்ற உறுப்பினர் உத்தரப் பிரதேசம்
பதவியில்
13 திசம்பர் 2013 – 4 சூலை 2016
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி

கல்வி தொகு

கனக் சிறீ மோகன் சிங் மற்றும் ஊர்மிளா சிங் தம்பதியரின் மகளாக சனவரி 1, 1962ஆம் நாளன்று வில் ஜெய்நகரில் பிறந்தார். லதா சிங் இலக்னோவின் மத்திய தொகுதியில் வசித்து வருபவர். கனக் லதா சிங் தனது பள்ளிக் கல்வியினை அலகாபாத்திலும் இடைநிலைக் கல்வியினை அலகாபாத்திலும், 1980 இளங்கலைப் பட்டப்படிப்பினை இலக்னோ பல்கலைக்கழகத்திலும் முடித்தப் பின்னர், லக்னோ பல்கலைக்கழகத்தில் முதுகலை (பண்டைய வரலாறு) படித்துள்ளார்.

அரசியல் தொகு

லதா சிங் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மறைந்த மோகன் சிங்கின் மகள் ஆவார்.[2] இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக திசம்பர் 13, 20013 முதல் சூலை 4, 2017 வரை பணியாற்றினார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Detailed Profile: Kanak Lata Singh". Govt. Of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
  2. "Kanaklata is Samajwadi Party candidate for Rajya Sabha poll". Times of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
  3. "Kanak Lata Singh". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-25. {{cite web}}: Text "PRSIndia" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனக்_லதா_சிங்&oldid=3665815" இலிருந்து மீள்விக்கப்பட்டது