முதன்மை பட்டியைத் திறக்கவும்

கனடா துடுப்பாட்ட அணி

கனடிய துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் கனடாவுக்காக விளையாடுகின்றது. கனடிய அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. கனடாவில் துடுப்பாட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் அனேகருக்கு ஈடுபாடு இல்லை. கனடாவுக்குத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமை இல்லை. துடுப்பாட்ட வரலாற்றின் முதல் சர்வதேசப் போட்டி 1844 இல் கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டியைக் கனடா 23 ஓட்டங்களால் வென்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_துடுப்பாட்ட_அணி&oldid=1345696" இருந்து மீள்விக்கப்பட்டது