கனடியத் தமிழ் இளைஞர் முன்னேற்ற நிலையம்

1990 களின் இறுதியில் கனேடியத் தமிழ் இளையவர்கள் மத்தியில் மிகுந்திருந்த வன்முறை குழுச் சண்டைகள் மற்றும் பிற பிரச்சினைகளில் இருந்து அவர்களுக்கு நல்வழிகாட்ட கல்லூரி-பல்கலைக்கழக மாணவர்களாலும் பட்டதாரிகளாலும் 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பே கனடியத் தமிழ் இளைஞர் முன்னேற்ற நிலையம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் கனடிய தமிழ் இளையவர்களை கனடிய மைய நீரோட்டத்தோடு ஆக்கபூர்வமாக இணைந்து இயங்க உதவுதல் ஆகும். அந்நோக்கில் பல முன் உதாரணங்களை எடுத்துக்காட்டி, தாமே முன் உதாரணங்களாக செயற்பட்டு இயங்கி வருகின்றார்கள்.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு