தமிழ் இளையோர் அமைப்பு

தமிழ் இளையோர் அமைப்பு புகலிட நாடுகளில் தமிழ் இளையோரைத் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் ஆக்கபூர்வமான முறைகளில் ஈடுபடுத்துவதற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். பண்பாடு, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், கலைகள், கலை நிகழ்வுகள், அரசியல், எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகள் எனப் பல தளங்களில் இவ்வமைப்பு செயற்படுகின்றது. இவ் அமைப்பு புகலிட நாடுகளில் வளரும் அடுத்த தலைமுறையினரைத் தமிழ்த் தேசிய நிகழ்வு-சிந்தனைப் புலத்துக்கு உள்வாங்கி அவர்களின் ஆற்றலைத் தமிழ்த் தேசியத்தின் குறிக்கோள்களுக்காகப் பயன்படுத்துவதில் கவனம் காட்டுகின்றது. இது புகலிட தமிழ் இளையோருக்கிடையே இடம்பெறும் குழுச் சண்டைகளுக்கு ஒரு மாற்றாக இருந்து புகலிட மற்றும் தாயக மக்களுக்குப் பயன் தரும் செயற்பாடுகளுக்குப் பலவகைகளில் உதவக்கூடிய ஓர் அமைப்பாகப் பரிணமிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.

தமிழ் இளையோர் அமைப்பின் சின்னம்

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_இளையோர்_அமைப்பு&oldid=3687998" இலிருந்து மீள்விக்கப்பட்டது