கனிதி விசுவநாதம்

இந்திய அரசியல்வாதி

கனிதி விசுவநாதம் (Kanithi Viswanatham) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1932 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறீகாகுளம் மக்களவைத் தொகுதியை கனிதி விசுவநாதம் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3] சுகாதாரம் மற்றும் உடல்நல அமைச்சகத்தின் தூதரகக் குழு உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

கனிதி விசுவநாதம்
Kanithi Viswanatham
కణితి విశ్వనాథం
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1989–1996
முன்னையவர்அப்பாயதுரை அனுமந்து
பின்னவர்எர்ரநாயுடு கிஞ்சரப்பு
தொகுதிசிறீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-07-01)1 சூலை 1932
அரிதாசபுரம், சிறீகாகுளம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்பொழுது ஆந்திரப் பிரதேசம், India)
இறப்பு15 ஏப்ரல் 2023(2023-04-15) (அகவை 90)
பலாசா, ஆந்திரப்பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இலலிதா விசுவநாதம்
பிள்ளைகள்2
மூலம்: [1]

இறப்பு தொகு

கனிதி விசுவநாதம் 15 ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேசத்தின் சிறீகாகுளத்தில் தனது சொந்த மாவட்டத்தில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 90 ஆகும்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. "Tenth Lok Sabha Members Bioprofile KANITHI VISWANATHAM, DR". Lok Sabha. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  2. "Cadres in limbo over Dharmana's move". Siva G. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 December 2013. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  3. "Srikakulam Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 September 2020.
  4. "కణితి విశ్వనాథం ఇకలేరు". Andhrajyothy Telugu News (in தெலுங்கு). 16 Apr 2023. பார்க்கப்பட்ட நாள் 16 Apr 2023.
  5. Laxmi, Maha (15 Apr 2023). "Breaking : మాజీ ఎంపీ..బిజెపి నాయ‌కులు క‌ణితి విశ్వ‌నాథం క‌న్నుమూత‌". Prabha News. பார்க்கப்பட்ட நாள் 16 Apr 2023.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிதி_விசுவநாதம்&oldid=3847873" இலிருந்து மீள்விக்கப்பட்டது