கனுபர்த்தி வரலக்சமம்மா

 

கனுபர்த்தி வரலக்சமம்மா
பிறப்புకనుపర్తి వరలక్ష్మమ్మ
அக்டோபர் 6, 1896
பாபட்லா,பிரித்தானிய இந்தியா
இறப்புஆகத்து 6, 1978(1978-08-06) (அகவை 81)
பணிசமூக செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
அனுமந்த ராவ்

கனுபார்த்தி வரலக்சமம்மா ( தெலுங்கு: కనుపర్తి వరలక్ష్మమ్మ ) (1896 – 1978) இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த பெண் எழுத்தாளரும் இந்திய சுதந்திர இயக்கத்தின் போராளியுமாவார்.

வாழ்க்கை வரலாறு தொகு

பாலபர்த்தி சேசய்யா மற்றும் அனுமயம்மா ஆகியோருக்கு 6 அக்டோபர் 1896 அன்று ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பாபட்லாவில் ஏழு ஆண் மற்றும் மூன்று பெண்களில் ஒருவராகப் பிறந்தவர் வரலக்சமம்மா. 1909 ஆம் ஆண்டில் கனுபர்த்தி அனுமந்த ராவை மணந்த இவரின் அனைத்து சமுதாய செயல்பாடுகளையும் இவரது கணவர் முழுமனதுடன் ஆதரித்துள்ளார். போலபிரகட ராசியலட்சுமியால் எழுதப்பட்ட கனுபர்த்தி வரலக்சமம்மாவின் வாழ்க்கை வரலாற்றில் (சாகித்ய அகாடமி) இவரது கணவரின் பங்களிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது 12 வயதில் தொடங்கி, இந்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டுள்ளார். மகாத்மா காந்தியின் சீடராக இருந்த இவர் பிற பெண்களையும் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்க ஊக்குவித்ததோடு, அவர்களின் சமூக வாழ்வியலை மேம்படுத்துவதற்காகவும் உழைத்துள்ளார். இவர் 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று மரணமடந்துள்ளார்[1].

இலக்கிய மற்றும் சமூக நடவடிக்கைகள் தொகு

இலக்கிய வாழ்க்கையை 1920 ஆம் ஆண்டு ஆந்திரப் பத்ரிகா வார இதழில் வெளியான மா செட்டுநீடா முச்சட்லு (எங்கள் மரத்தின் நிழலில் அரட்டையடித்தல்) என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளுடன் தொடங்கியுள்ள வரலக்சமம்மா, இந்த கட்டுரைப்பத்தியில், பெண்களுக்கான கல்வி, பாரம்பரியங்கள், அரசியல் மற்றும் பல்வேறு துறைகளில் தற்போதைய போக்குகள் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி எழுதி பல ஆக்கப்பூர்வமான விவாதங்களை தொடங்கியுள்ளார். இந்த கட்டுரைப்பத்திகளை தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக எழுதியள்ளார்.

1928 ஆம் ஆண்டில் க்ருஹலக்ஷ்மி என்ற புதிய இதழில் மற்றுமொரு கட்டுரைப்பத்தியைத் தொடங்கிய வரலக்சமம்மா, சாரதா லேகலு (சாரதாவின் கடிதங்கள்) என்ற தலைப்பிலும் சாரதா என்ற புனைப்பெயரிலும் கல்பலதா என்ற கற்பனை தோழிக்கு எழுதப்பட்ட கடிதங்கள் என்பதாக எழுதப்பட்டுள்லது. இந்தக் கடித கட்டுரைகளில்[2], சர்தா சட்டம், விவாகரத்துச் சட்டம், காதி இயக்கம், ஒத்துழையாமை, தீண்டாமை ஒழிப்பு, அடிப்படையற்ற பழக்கவழக்கங்கள், உடல் உடற்பயிற்சி, அளவீடுகள் மற்றும் எடைகள் மற்றும் ஒலிவாங்கிகளில் அமல்படுத்தப்பட்ட மாற்றங்கள் போன்ற சமூக, சட்ட, தனிப்பட்ட காரியங்களை எழுதி விவாதித்துள்ளார்.

பெண்களின் கல்வி மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் சமூக அந்தஸ்தை மேம்படுத்தவும் ஸ்திரீ ஹிதைஷினி மண்டலி என்ற பெண்கள் அமைப்பை 1931 ஆம் ஆண்டில் தொடங்கி அதன்மூலம் சேவைபுரிந்துள்ளார்.[3]

பல்வேறு கவிதைகள், கதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்களை எழுதியுள்ள இவரது எழுத்துக்கள் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் (இந்தியா டிவி) ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அவரது காலத்தில் புகழ்பெற்ற கவிஞர்களுடன் இலக்கிய சந்திப்புகளில் பங்கேற்றுள்ளார். வரலக்சமம்மா முதல் புதினமான வசுமதி 1925 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது. அவரது இரண்டாவது புதினமான விஸ்வாமித்ரா 1933 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.

  • குடீரலட்சுமி (குடிசையில் இருக்கும் தெய்வம்),
  • பென்ஷானு புச்சுக்குன்னா நாட்டி ராத்திரி (ஓய்வு பெற்ற அன்று இரவு),
  • கதை ஏட்ல உண்டாலே (என்ன நல்ல கதை) மற்றும்
  • ஐது மாசமுலு இருவதி தினமுலு (ஐந்து மாதங்கள் இருபது நாட்கள்) ஆகியவை இவரால் எழுதப்பட்ட புகழ்பெற்ற சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

மேற்கோளகள் தொகு

  1. "சாரதாலேகாவுடன் விழிப்புணர்வை ஏற்படுத்திய கனுபர்த்தி வரலக்சமா". TeluguOne News. பார்க்கப்பட்ட நாள் 2024-02-20.
  2. "ஒரு பெண்ணிய எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர்". Indian Liberals (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-20.
  3. Development, PodBean. "Kanuparti Varalakshmamma Garu - కనుపర్తి వరలక్ష్మమ్మగారు | KiranPrabha Telugu Talk Shows". kiranprabha.podbean.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-20.

வெளிப்புற ஆதாரங்கள் தொகு

  • ராஜ்யலட்சுமி, போலபிரகதா. (200) கனுபார்த்தி வரலக்சமம்மா. புதுடெல்லி: சாகித்ய அகாடமி.
  • வரலக்சமம்மா. குடீரலட்சுமி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். [1]
  • வரலக்சமம்மாபற்றிய விரிவான கட்டுரை [2]
  • தெலுங்கில் வரலக்சமம்மாபற்றிய விரிவான கட்டுரை [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனுபர்த்தி_வரலக்சமம்மா&oldid=3894396" இலிருந்து மீள்விக்கப்பட்டது