கனுபாய் கல்சாரியா

இந்திய அரசியல்வாதி

கனுபாய் கல்சாரியா (Kanubhai Kalsariya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒரு சமூக ஆர்வலராகவும் அறியப்படுகிறார்.


கனுபாய் கல்சாரியா
Kanubhai Kalsariya
சட்டப் பேரவை உறுப்பினர், குசராத்து சட்டமன்றம்
பதவியில்
1997–2012
தொகுதிமகூவா சட்டமன்றத் தொகுதி, பாவ்நகர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (1997-2012), ஆம் ஆத்மி கட்சி (2014-2018), இந்திய தேசிய காங்கிரசு (2018-)

தொழில்

தொகு

கல்சாரியா 1997 முதல் 2012 ஆம் ஆண்டு வரை 10, 11 மற்றும் 12 ஆவது குசராத்து சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு மகூவா தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 2012 ஆம் ஆண்டு வரை பாரதிய சனதா கட்சியில் உறுப்பினராக இருந்த இவர் தனது உறுப்பினர் பதவியை புதுப்பிக்கவில்லை. 2011 ஆம் ஆண்டில் மகூவா அருகே நிர்மா சிமென்ட் ஆலைக்கு எதிராக இவர் த்லைமையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அந்நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டது. இவர் சத்பவ்னா மஞ்ச் கட்சியைத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற குசராத் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார் ஆனால் தோல்வியடைந்தார். [2] 2014 ஆம் ஆண்டு கனுபாய் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார் [3] பின்னர் 2018 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு மாறினார். [4]

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தலச்சா அருகே அல்ட்ராடெக் சிமென்ட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக இவர் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். பின்னர் 2021 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் சுரங்கத் தளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக உள்ளூர் நீதிமன்றம் இவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat assembly. Archived from the original on 26 December 2018. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
  2. "Gujarat Elections: BJP rebel Kanu Kalsaria defeated". பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
  3. "Ex-BJP rebel MLA Kanu Kalsaria joins AAP". பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
  4. "Ex-MLA Kalsariya joins Congress". https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/ex-mla-kalsariya-joins-congress/articleshow/64953672.cms. 
  5. "Gujarat: Former MLA Kanu Kalsariya sentenced to six months in jail". 2021-02-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனுபாய்_கல்சாரியா&oldid=3848468" இலிருந்து மீள்விக்கப்பட்டது