குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012

குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012 என்பது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை குறிக்கிறது.[2] 13 மற்றும் 17 திசம்பர் 2012ல் இரண்டு கட்டங்களாக இத்தேர்தல் நடைபெற்றது. 20 திசம்பர் 2012ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தியது.

குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012

← 2007 13 மற்றும் 17 டிசம்பர் 2012 2017 →

குஜராத் சட்டப்பேரவையில் 182 இடங்கள்
அதிகபட்சமாக 92 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்72.02% (Increase12.25%)
  First party Second party
 

தலைவர் நரேந்திர மோடி சக்சின் கோகில்
கட்சி பா.ஜ.க காங்கிரசு
தலைவரான
ஆண்டு
2001 2007
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
மணிநகர்
(வெற்றி)
பாவ்நகர் தெற்கு (தோல்வி)
முந்தைய
தேர்தல்
117 59
வென்ற
தொகுதிகள்
115 61
மாற்றம் 2[1] Increase 2
மொத்த வாக்குகள் 13,119,579 10,674,767
விழுக்காடு 47.85% 38.93%
மாற்றம் 1.27% Increase 0.93%

குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரைபட முடிவுகள்

India Gujarat Legislative Assembly 2012
தேர்தலுக்குப் பிந்தைய குஜராத் சட்டமன்றம்

முந்தைய முதலமைச்சர்

நரேந்திர மோடி
பா.ஜ.க

முதலமைச்சர் -தெரிவு

நரேந்திர மோடி
பா.ஜ.க

குஜராத் சட்டமன்றத்திற்கான 182 உறுப்பினர்களை அம்மாநில மக்கள் தேர்தெடுத்தனர்.[3]

அப்போதைய முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி 2001லிருந்து முதலமைச்சராக பதவி வகித்தார்.[4][5] தற்போது குஜராத்தின் முக்கிய எதிர்கட்சியாக காங்கிரசு கட்சி உள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் 71.32 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முதல் கட்டத்தில் 70.75 சதவீதமும், இரண்டாம் கட்டம் 71.85 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.[6]

முக்கிய நிகழ்வுகள்

தொகு
    • காங்கிரஸின் முன்னாள் துணை முதலமைச்சர் நர்ஹாரி அமீன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததைத் தொடர்ந்து பிஜேபியில் இணைந்தார்.

முடிவுகள்

தொகு

திசம்பர் 20, 2012 அன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய ஆளும் பாஜக மூன்றாம் முறையாக அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பிஜேபி 115 தொகுதிகளும், காங்கிரஸ் 61 தொகுதிகளும் தேசியவாத காங்கிரஸ் 2, கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்தன் கட்சிக்கு 3, மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.[7]

தரம் கட்சி வென்றவர்கள்
1 பாஜக 115
2 இந்திய தேசிய காங்கிரஸ் 61
3 தேசியவாத காங்கிரஸ் 2
4 ஐக்கிய ஜனதா தளம் 1
5 இதர கட்சிகள் 3
மொத்தம் 182

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Election, 2012 to the Legislative Assembly of Gujarat" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 2013-12-14.
  2. "Two-phase Assembly polls in Gujarat". தி இந்து. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (புது தில்லி). 3 October 2012. http://www.thehindu.com/news/national/twophase-assembly-polls-in-gujarat/article3961554.ece?homepage=true. 
  3. "Two-phase Assembly polls in Gujarat". தி இந்து. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (புது தில்லி). 3 October 2012. http://www.thehindu.com/news/national/twophase-assembly-polls-in-gujarat/article3961554.ece?homepage=true. பார்த்த நாள்: 3 October 2012. 
  4. "Gujarat results 2012 Live :Modi's claim for PM's post gets stronger". Samay Live. 2012-12-20 இம் மூலத்தில் இருந்து 8 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130308065319/http://english.samaylive.com/nation-news/676520489/gujarat-elections-results-live-narendra-modi-bjp-congress-bharat.html. 
  5. Singh, Manisha (3 October 2012). "Gujarat Assembly Elections 2012: The countdown begins". Zee News. http://zeenews.india.com/blog/72/blog892.html. 
  6. "Record voter turnout in Gujarat - 71.32%". Zee News. பார்க்கப்பட்ட நாள் 18 December 2012.
  7. "Modi scores a hat-trick in Gujarat, BJP loses HP to Congress". டைம்ஸ் ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2012.

வெளி இணைப்புகள்

தொகு