தலசா (Talaja) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் பாவ்நகர் மாவட்டம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சியாகும்.

தலசா
Talaja
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்பாவ்நகர்
ஏற்றம்
19 m (62 ft)
மக்கள்தொகை
 (2001)[1]
 • மொத்தம்28,822
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
தாலத்வாய் குன்று - தலசா

புவியியல் அமைப்பு

தொகு

21.35° வடக்கு 72.05° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில்[2] பாவ்நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் மாகுவா நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் தலசா நகராட்சி பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 19 மீட்டர்கள் (62 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. இந்நகராட்சியில் கப்பல் உடைப்புக்கு புகழ்பெற்ற, உயர் அலை வேறுபடும் பரப்பைக் கொண்ட கடற்கரை நகரம் அலங் இடம்பெற்றுள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[3] இந்நகரின் மக்கள் தொகை 26,187 ஆகும். இம்மக்கள் தொகையில் 51 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 49 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். தோலா நகரின் படிப்பறிவு சதவீதம் 62% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 68% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 55% ஆகும். மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

போக்குவரத்து

தொகு

தலசா நகராட்சியில் இந்திய இரயில்வேயின் பாவ்நகர்- மாகுவா குற்றகலப்பாதை தொடருந்து நிலையம் ஒரு காலத்தில் இருந்தது. 1990 களின் ஆரம்ப காலத்தில் இப்போக்குவரத்து வசதி நீக்கப்பட்டது. எனவே தற்பொழுது அங்கு இவ்வசதி இல்லை என்றாலும் அருகில் 40 கிலோமீட்டர் தொலைவில் பாலிதானா தொடருந்து நிலையமும் 54 கிலோமீட்டர் தொலைவில் பாவ்நகர் தொடருந்து நிலையமும் இருக்கின்றன. தலசா தாலுக்காவில் 108 கிராமங்கள் உள்ளன. தலசாவில் இருந்து மற்ற நகரங்களை இணைக்க பேருந்து பணிமனை ஒன்றும் இங்குள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=547252
  2. Falling Rain Genomics, Inc - Talaja
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலசா&oldid=3575364" இலிருந்து மீள்விக்கப்பட்டது