கனு காந்தி

மகாத்மா காந்தி குடும்ப உறுப்பினர்

கனு காந்தி (Kanu Gandhi) (1917-1986), மகாத்மா காந்தியின் பேரனும், ராம்தாஸ் காந்தி – நிர்மலா இணையரின் மகன் ஆவார். இவரின் உடன் பிறந்த சகோதரிகள் சுமித்திரா காந்தி மற்றும் உஷா காந்தி ஆவார்.

கனு காந்தி, காந்திஜியின் தனி உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர். காந்திஜியியுடன் நெருங்கிப் பழகி அவருடன் ஆசிரமங்களில் தங்கி பணி புரிந்தவர். காந்திஜியின் இறுதிப் பத்தாண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை புகைப்படமெடுத்தவர்.[1][2]

1944ஆம் ஆண்டில் காந்திஜியின் ஆதரவுடன், ஆசிரமத்தில் 13 ஆண்டுகளாக வாழ்ந்த காந்தியின் கைத்தடி என்று செல்லமாக அழைக்கப்பட்ட அபாபென் சட்டர்ஜி எனும் பெண்ணை, கஸ்தூரிபாய் மற்றும் காந்திஜியின் ஆசிகளுடன் கனு காந்தி திருமணம் செய்து கொண்டார்.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனு_காந்தி&oldid=2561667" இருந்து மீள்விக்கப்பட்டது