கன்காய் ஆறு

கன்காய் ஆறு (மாய் கோலா எனவும் அழைக்கப்படுகிறது) (நேபாளி: कन्काई नदी) இரு பிரதேசங்களின் எல்லையின் ஊடாக பயணிக்கும் ஆறு ஆகும். இது நேபாளத்தின் இலாம் மற்றும் ஜாபா வழியாக வடக்கிலிருந்து தெற்காகப் பாய்கிறது. நேபாளம் முழவதிலும் வாழும் பல இலட்சக்கணக்கான இந்துக்களின் புனித ஆறாக இது திகழ்கிறது. இலாம் குன்றுப்பகுதிகளிலிருந்து தொடங்கி ஜாபா மாவட்டம் வழியாகப் பாய்கிறது. ஜாபா மற்றும் இலாமில் வாழும் இந்துக்கள் இறந்தோருக்கான இறுதிச்சடங்குகளை நிகழ்த்தும் இடமாக கோடிகோம் ஆற்றங்கரை விளங்குகிறது. நேபாள அரசினால் செயல்படுத்தப்பட்ட கான்காய் பாசனத்திட்டம் தெற்கு ஜாபாவின பகுதிகளான சிவ்கஞ்ச், பச்கசி, மகாவரா மற்றும் இதர பகுதிகளுக்கும் பாசன வசதியை ஏற்படுத்தித்தருகிறது. கான்கிமாய் அல்லது மாய் கோலா  தோமுகா, தனுஷ்கோடி, சுளி, சேப்டி மற்றும் மாய்பொகாரி போன்ற பல சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. பருவக்காற்றுக் காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஜாபா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வளமான நிலப்பகுதிகளில் பாயும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஆற்றில் உள்ளூர் மீனவர்கள் மீன் பிடிப்பதையும், சிறுவர்கள் சூரிய ஒளியில் குளிப்பதையும் பார்ப்பது மிக்க அழகான காட்சியாகும். மகத்தைக் கொண்டாட இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், ஜாபா, மோராங், இலாம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் வரும் மக்களுக்காக கோடிகோம் சுருங்கா நகராட்சி ஆண்டுதோறும் மாய் மேளாவை நடத்தி வருகிறது. கோடிகாம் ஆற்றங்கரையில் இறந்தோருக்கான மதச்சடங்குகளை நிறைவேற்றுவதற்கான கன்காய் ஆர்யகாட் என்ற பெயரில் பொதுப்பங்களிப்பின் மூலம் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 

கன்காய் ஆறு
ஆறு
நாடு நேபாளம்
கிளையாறுகள்
 - வலம் ரத்வா கோலா
உற்பத்தியாகும் இடம் மகாபாரத் லேக்/மாய்பொகாரி இலாம் Nepal
கழிமுகம் மகாநந்தா

சொற்பிறப்பியல் (அல்லது) பெயர்க்காரணம்

தொகு

இந்த ஆற்றின் பெயர் கன்காய் என்பது கனகா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் கனகா என்பதற்கு தங்கம் என்று பொருள்படும். மற்றுமொரு காரணம் பின்வருமாறு கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கன்காய் ஆற்றுக்குப் பின்னால் இருந்த மலைப்பகுதியில் சில துறவிகள் தங்களது துறவு மற்றும் தியான வாழ்க்கைக்காக வசித்து வந்த போது ஒரு பொற்கல் ஆற்றின் நீரிலிருந்து தோன்றியது. ஆகவே, துறவிகள் இந்த ஆற்றினை ”கனகவதி மாய்” அல்லது ”தங்க தேவதை” என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது. படிப்படியாக மக்கள் இந்த ஆற்றை கன்காய் ஆறு என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆற்றின் போக்கு

தொகு

கன்காய் ஆறானது நேபாளத்தில் உள்ள மகாபாரத் மலைத்தொடரில் உற்பத்தியாகிறது. இது நேபாளத்தின் வழியாகப் பாய்ந்து பின்னர் இந்திய மாநிலங்களில் பீகார் மாநிலம் வழியாகப் பாய்ந்து கிசன்கஞ்ச் மாவட்டத்தில் மகாநந்தாவில் கலக்கிறது.[1][2][3]கன்காய் ஆறு 60 சதவிகிதத்திற்கும் மேலாக கனிமங்களைக் கொண்டதாகவும், மேலும், மீதமுள்ள பாறைகள் பலதரப்பட்ட உருமாற்றமடைந்த படிவுப் பாறைகளாகவும் உள்ளன. ஆற்றினால் ஏற்படும் வண்டல் மண் விளைச்சலானது ஆண்டொன்றுக்கு 0.148 மில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.[4]கன்காய் ஆற்றின் வடிநிலப்பகுதியின் பரப்பானது 1148 சதுர கிலோமீட்டர் (443 சதுர மைல்கள்) ஆகும்.[5]

பாசன வசதி அமைப்பு

தொகு

கன்காய் பாசனத் திட்டமானது, நேபாளத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள தெராய் மாவட்டத்தில் ஜாபாவில் காணப்படும் 20,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி செய்து தரும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் பரப்பானது கிழக்கே கன்காய் ஆறு முதல் தொடங்கி, மேற்கே கிரிஷ்ணா ஆறு வரையிலும் வடக்கே மகேந்திரா நெடுஞ்சாலையிலிருந்து தொடங்கி தெற்கே இந்திய எல்லை வரையிலும் பரவிக்கிடக்கிறது. இத்திட்டத்தின் சாத்தியம் குறித்த விரிவான ஆய்வு ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் 1970 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளானது இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டப்பணிகள் 1973 ஆம் ஆண்டில் தொடங்கி 1981 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இரண்டாம் கட்டமாக, கூடுதல் 3000 எக்டேர் நிலப்பரப்பிற்குப் பாசன வசதி செய்து தரும் பொருட்டு 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணியானது 1991 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆனால், 2000 எக்டேருக்கான பாசன வசதி மட்டுமே சாத்தியமானது. ஒட்டுமொத்தமாக 7000 எக்டேர் அல்லது 17000 ஏக்கர் நிலப்பகுதியானது பாசன வசதி செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பானது 310 மில்லியன் ரூபாயாகும். இத்தொகையில் 63 விழுக்காட்டை ஆசிய வளர்ச்சி வங்கி கடனாகத் தந்துள்ளது. [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Five Themes of Geography" (PDF). Rivers. Archived from the original (PDF) on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2010-05-22.
  2. "Kishanganj district". Kishanganj district administration. Archived from the original on 2010-04-08. பார்க்கப்பட்ட நாள் 2010-05-22.
  3. "Kankai River". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.
  4. UK Raghubanshi. "Font Size: Engineering, hydrological, and sedimentation studies of the Kankai River, eastern Nepal". Journal of Nepal Geological Society, Vol 36 (2007). Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.
  5. "An overview of glaciers, glacier retreat and subsequent impacts in Nepal, India and China" (PDF). WWF. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.
  6. "The modernization efforts of the Kankai irrigation system". FAO Corporate Document Repository. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்காய்_ஆறு&oldid=3548643" இலிருந்து மீள்விக்கப்பட்டது