கன்னிக் கனியமாதல்
கன்னிக் கனியமாதல் (parthenocarpy, கன்னிப் பழம் என்பது பொருள்) என்பது இயற்கை மற்றும் செயற்கை முறையில் சூல்வித்து உதவியின்றி பழங்களை உற்பத்தி செய்யத் தூண்டும் முறையாகும். இதனால் பழங்கள் விதையற்றுக் காணப்படும். கன்னிக் கனியமாதல் முறை வெளிபப்டையான விதையற்ற பழங்களை உற்பத்தி செய்தாலும், விதைகள் உண்மையில் சிறியதாக இருக்கும்போது சிதைவுற்றுவிடுகின்றன. கன்னிக் கனியமாதல் முறை இயற்கைளில் மாறுபாடாக எப்போதாவது சிலவேளைகளில் ஏற்படுகிறது. ஆனால் இதன் தாக்கம் ஒவ்வொரு பூவிலும் ஏற்பட்டு, தாவரம் பாலியல்சார் உற்பத்தியை ஏற்படுத்த முடியாதாயினும் தாவர வளர்ச்சி இனப்பெருக்கத்திற்கு உதவலாம்.
இதனையும் பார்க்க
தொகுவெளியணைப்பு
தொகு- Weiss, J., Nerd, A. and Mizrahi, Y (1993). "Vegetative parthenocarpy in the cactus pear Opuntia ficus-indica (L.) Mill". Annals of Botany 72 (6): 521–6. doi:10.1006/anbo.1993.1140. http://aob.oxfordjournals.org/cgi/reprint/72/6/521.