கன்னிப்பிறப்பு
கன்னிப்பிறப்பு அல்லது தன் கருவுறுதல் (Parthenogenesis) எனப்படுவது கருக்கட்டல் நிகழாமல் முளையமாக மாறி, வளர்ச்சியடையும் கலவியற்ற இனப்பெருக்க வடிவமாகும். விலங்குகளில் கன்னிப்பிறப்பு என்பது இனப்பெருக்கமற்ற முட்டைக்கருவில் இருந்து முளைய வளருதலையும், இனக்கலப்பிலா படிமுறையையும் குறிக்கும்.
கன்னிப்பிறப்பு இயற்கையாக பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள்,சில குளவி இனங்கள் மற்றும் முதுகெலும்பிகளான சில மீன் இனங்கள்,[1] நீர்நில வாழ்வன, ஊர்வன[2][3] மற்றும் மிக அரிதாகச் சில பறவைகளில் காணப்படுகின்றன.[4]
பெரும்பாலான உயிரினங்களில் ஒரு ஆண் உயிரணுவும், பெண் சினை முட்டையும் சேர்ந்து கரு உருவாகுகிறது. ஆண், பெண் உயிரணுக்கள் ஒன்றாக இணைந்து ஒரு கரு வளச்சியடைவைதன் மூலம் தான் புதிதாக ஓர் உயிரி ஜணிக்க முடியும். இதில் ஆண் உயிரினத்தின் துணையின்றிப் பெண் உயிரினமே கரு உருவாக்குவதை தன்கருவுறுவாதல் என்பர். உதாரணமாக குருட்டுப் பாம்பு எனும் புழுப் பாம்பு (Worm Snake) இனத்தில் ஆணே கிடையாது. பெண் மட்டும்தான் உள்ளது. பெண் பாம்பே தானாகக் கருவை உருவாக்கிக்கொள்ளும்.
மேலும் ஊர்வன வகைகளில் பெரும்பாலும் ஒருமுறை ஆணுடன் இணை சேர்ந்துவிட்டது என்றால் தங்களின் கருப்பாதையில் உள்ள குழாயில் விந்தணுக்களை நீண்ட காலம் சேகரித்து வைத்துக்கொள்ளும். தனக்குச் சாதகமான சூழல் வரும்போது கருசேர்ந்து முட்டைகளிட்டோ, குட்டிகள் ஈன்றோ புதிய உயிரை உருவாக்கும். ஊர்வனவற்றில் இது மிகவும் இயல்பானது. மேலும் தன் கருவுறுவாதல் எறும்புகள், குளவிகள், தேனீக்கள் போன்ற முதுகெலும்பு அற்ற உயிரினங்களில் இது இயல்பாக உள்ளது.
இதனையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Female Sharks Can Reproduce Alone, Researchers Find", Washington Post, Wednesday, May 23, 2007; Page A02
- ↑ Halliday, Tim R. (1986). Reptiles & Amphibians. Torstar Books. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-920269-81-8.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Walker, Brian (2010-11-11). "Scientists discover unknown lizard species at lunch buffet". CNN. http://www.cnn.com/2010/LIVING/11/10/lizard.lunch.discovery/. பார்த்த நாள்: 2010-11-11.
- ↑ Savage, Thomas F. (September 12, 2005). "A Guide to the Recognition of Parthenogenesis in Incubated Turkey Eggs". Oregon State University. Archived from the original on 2019-02-20. பார்க்கப்பட்ட நாள் 2006-10-11.