கன்னிமரத் தேக்கு
கன்னி மரம் (Kannimara Teak) என்பது உலகின் மிகப்பெரிய, வயதான தேக்கு மரமாகும். இது தென் இந்தியாவின், கேரளம் மாநிலத்தில் பாலக்காடு மாவட்டம் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயத்தின், பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் உள்ள மரமாகும். இந்த மரம் துணக்கடலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இம்மரத்தின் வயது சுமார் 465 ஆகும். இந்த தேக்கு மரத்தின் உயரம் 39.98 மீ, சுற்றளவு 7.150 மீட்டர் ஆகும். இந்திய ஒன்றிய அரசு 1994-95 இல் இருந்து மகாவிருட்ச புரஸ்கார் திட்டத்தின்கீழ் இந்த மரத்தை பராமரித்து வருகிறது.
உள்ளூர் பழங்குடி மக்களின் நம்பிக்கையின்படி, ஒரு காலத்தில் இந்த மரத்தை வெட்ட முயன்றபோது, இதன் வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குருதி வெளியேறியதாகவும், அப்போதிருந்து, இந்த மரத்தை பரம்பிகுளத்தில் உள்ள பழங்குடியினர் “கன்னி மரம்” என்று வணங்கினர். இவ்வாறு இந்த மரம் கன்னிமாரம் என்று பெயர்பெற்றது.[1]