கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு பாலம்

கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் (Kanyakumari Glass bridge) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை நடை பாலம் ஆகும். இப்பாலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள பாறைக்கும், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும் இடையே கடலின் மேல் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தை திருவள்ளுவர் சிலை கட்டப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.[1]

கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம்
Kanyakumari Glass bridge
ஆள்கூற்று8°04′40″N 77°33′16″E / 8.0779°N 77.5545°E / 8.0779; 77.5545
இடம்இந்தியா, தமிழ்நாடு, கன்னியாகுமரி
Characteristics
அகலம்4 m (13 அடி)
உயரம்97 m (318 அடி)
அதிகூடிய தாவகலம்430 m (1,410 அடி)
கீழ்மட்டம்300 m (980 அடி)
History
Construction cost37 கோடி
கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் is located in தமிழ் நாடு
கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம்
கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம்
கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் (தமிழ் நாடு)

பின்னணி

தொகு

கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டன. கடல் நீர்மட்ட உயர்வு மற்றும் கடல் நீரோட்டங்களால் வள்ளுவர் சிலைக்கு சில காலமாக மக்கள் போக முடியாத நிலை ஏற்பட்டது. விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து இருந்து வந்தது. எனவே விவேகானந்தர் நினைவு மண்டபத்திலிருந்து நேரடியாக திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல கடலின் மேலே பாலம் கட்ட அரசால் முடிவு செய்யப்பட்டு கட்டுமானப்பணிகள் சூன் 2024-இல் தொடங்கப்பட்டது. [2] இந்தக் கட்டுமானப்பணிகள் திசம்பர் 2024 நிறைவடைந்தது. இப்பாலம் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் போது திறக்க முடிவு செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இரண்டு நாட்கள் வெள்ளிவிழாவைக் கொண்டாடியது. 30 திசம்பர் 2024 அன்று நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.[3]

அமைப்பு

தொகு

வில்நாண் வளைவுப் பாலம் (Bowstring Arch Bridge) வகையைச் சேர்ந்த இப்பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டது.[4] பாலத்தின் நடுவில் இரண்டு அங்குல தடிமன் கொண்ட 3 அடி அகலமுடைய ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடியால் ஆன தரை ஓடுகளும், அதன் இருபுறங்களிலும் ஒளி புகாத சாதாரண தரை ஒடுகளும் பதிக்கப்பட்டுள்ளன. கண்ணாடியின் வழியே கடலை கண்டு ரசிக்கும் வகையில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு