கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில் (ஆங்கில மொழி: Tirupati Venkateswara temple in Kanyakumari) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி புறநகர்ப் பகுதியில், கன்னியாகுமரி கடலோரமாக கட்டப்பட்டுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8°05′30″N 77°33′36″E / 8.0917°N 77.5601°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | கடல் திருப்பதி[1] |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கன்னியாகுமரி மாவட்டம் |
அமைவிடம்: | கன்னியாகுமரி |
சட்டமன்றத் தொகுதி: | கன்னியாகுமரி |
மக்களவைத் தொகுதி: | கன்னியாகுமரி |
ஏற்றம்: | 56 m (184 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | வெங்கடாசலபதி |
தாயார்: | பத்மாவதி |
சிறப்புத் திருவிழாக்கள்: | பிரம்மோற்சவம், ரத உற்சவம், தீர்த்தவாரி, சீனிவாச கல்யாணம் |
உற்சவர்: | சீனிவாசர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
வரலாறு | |
கட்டிய நாள்: | 2019-01-27[2] |
அமைத்தவர்: | திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திரப் பிரதேசம் |
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கட்ட திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் கோயில்களைக் கட்டி வருகிறது.
தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரம், தனது வளாகத்தின் ஐந்தரை ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கிய நிலத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூபாய் 22.5 கோடியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கட்ட 13 சூலை 2013 அன்று கட்டுமானப்பணி துவக்கியது.
இரண்டு தளங்களுடன் கட்டப்பட்ட இக்கோயிலில் மேல்தளத்தில் மூலவர் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருடாழ்வாருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கீழ் தளத்தில் மடப்பள்ளி, கல்யாண மண்டபம், அர்ச்சகர்கள் தங்கும் குடியிருப்புகள், சகஸ்ர தீப அலங்கார மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.[3][4][5][6][7][8]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "கன்னியாகுமரியில் கடல் திருப்பதி". Dinamalar. 2019-02-03. பார்க்கப்பட்ட நாள் 2023-09-13.
- ↑ மாலை மலர் (2023-06-06). "கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-13.
- ↑ "TTD opens Lord Balaji temple in Kanyakumari". Archived from the original on 2019-10-19. பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.
- ↑ Rs 22-crore Tirupati Venkateswara temple consecrated in Kanyakumari
- ↑ https://tamil.samayam.com/religion/temples/kanyakumari-tirupati-temple-kumbabishekam/articleshow/67707077.cms
- ↑ கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "TTD opens Lord Balaji temple in Kanyakumari". Archived from the original on 2019-10-19. பார்க்கப்பட்ட நாள் 2020-09-13.
- ↑ Rs 22-crore Tirupati Venkateswara temple consecrated in Kanyakumari