கபிலை கண்ணிய வேள்வி நிலை
தொல்காப்பியம் புறத்திணையின் 7 பிரிவுகளில் ஒன்றாகிய பாடாண்திணையின் துறைகளில் ஒன்றாக இந்தக் கபிலை கண்ணிய வேள்வி நிலையைக் குறிப்பிடுகிறது. [1]
கபிலை என்பது பசுமாடு.
இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் புறத்திணையைப் 12 திணைகளாகப் பகுத்துக்கொண்டுள்ள புறப்பொருள் வெண்பாமாலை நூலிலுள்ள பாடல் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தருகிறார். அந்தப் பாடல்
- பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
- குருக்கண் கபிலை கொடுத்தான் - செருக்கோ(டு)
- இடிமுரசத் தானை இகல்இரிய எங்கோன்
- கடிமுரசம் காலைசெய் வித்து [2]
பாடல் சொல்லும் செய்தி
- அரசன் முரசு முழக்கத்துடன் பார்ப்பார்க்குப் பொன்னைத் தானமாக வழங்கியதோடு கபிலை என்னும் ஆனிரைகளையும் பரிசாக வழங்கினான்.
வரலாறு
- பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்துப் பிடித்துவந்த வருடை ஆடுகளைத் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து அவற்றையும், கபிலையையும் பார்ப்பார்க்கு வழங்கினான். [3]